கில்கமெஷ் காவியம்
கில்கமெஷ் காவியம், ஸ்டாலின், சாகித்ய அகடமி, விலைரூ.190.
மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல் அரசர் கில்கமெஷ் ஆட்சியில், மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். கில்கமெசிற்கு எதிராக தெய்வங்கள் என்கிடுவை உருவாக்குகின்றன.
காட்டில் கொடிய விலங்குகளுடன் வாழும் என்கிடு, அவரை மாற்றுகிறார். முடிவில் கில்கமெஷ் மனம் மாறி, தெய்வங்களின் மறைபொருளை கூறுகிறார்.
யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றங்கரைகளில், கி.மு., 2800க்கும் – கி.மு., 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் கிஷ் பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரைக் கதை இது.
பதினோரு களிமண் சுவடிகளில் எழுத்தாக பதிக்கப்பட்ட புதினக் கதை, பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் தற்போது வெளியாகியுள்ளது. களிமண் சுவடிக் காவியம் கையில் நுாலாக வந்துள்ளது.
– முனைவர் மா.கி.இரமணன்
நன்றி: தினமலர், 15/3/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030003_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818