பாவேந்தர் பாரதிதாசனின் ஒன்பதுசுவை

பாவேந்தர் பாரதிதாசனின் ஒன்பதுசுவை, போர்மறவன், முல்லை பதிப்பகம், விலை 20ரூ. கவிதை வடிவில் இரு சிறு நாடகங்கள். தமிழின் அழகும், தமிழர்தம் காதலும், வீரமும் பேசும் எளிய காவியங்கள். பாவேந்தரின் பா நயத்தில் பரிமளித்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வெள்ளம்

  வெள்ளம், மா.கமலவேலன், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 65ரூ. நாடகம் என்றாலே தொலைக்காட்சி தொடர்கள்தான் என்கிற எண்ணம் மேலோங்கியிருக்கும் சூழலில், பாரம்பரியமிக்க தமிழ் நாடகக் கலையை இன்னமும் தக்க வைத்துக்கொண்டிருப்பவை சில நாடகக் குழுக்களும், வானொலி நிலையங்களுமே. மதுரை வானொலியில் ஒளிபரப்பான வெள்ளம், கவிதை எனும் இரு நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டே நாடகத்தை வேகமாக நகர்த்திப்போகும் வசனங்கள் நாடகாசிரியரின் எழுத்தாற்றலுக்கு நல்ல சான்று. நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், டி.வி.ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தக நிலையம், பக். 160, விலை 100ரூ. குறைந்த விலை உள்ள இந்த நூல் ஒரு சிறந்த தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. நூலாசிரியர் ராதாகிருஷ்ணன், 55 ஆண்டுகளுக்கும் மேல் நாடகப் பணி புரிந்தவர். 25க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதித் தயாரித்து, நடித்து இயக்கியவர். தமிழ் நாடக மேடையின் தோற்றம் முதல் இன்று நாடகம் நடத்தும் குழுக்கள் வரைஇந்நூலில் எழுதியுள்ளார். தொழிற்துறை நாடக சபை துவங்கி, அமெச்சூர் நாடகக் குழுக்கள் வரை அனைத்து நாடக சபை […]

Read more

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், காவ்யா பதிப்பகம், பக். 340, விலை 330ரூ. திருநெல்வேலியில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, புதுவையில் நாடகத் தமிழ் வளர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவரின் எழுத்து, இயக்கம், பேச்சு, மூச்சு என அனைத்து செயல்களும் நாடகத்தமிழில்தான் இருந்தன. அவரால், நாடகத்தமிழ் புத்துயிர் பெற்றது. அவரை தற்கால தலைமுறை புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 10/1/2018.

Read more

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம், அரிமளம் சு.பத்மநாபன், காவ்யா,  பக்.340 ; விலைரூ.330; 1867 இல் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்துறையின் முன்னோடியாவார். அவர் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற பாய்ஸ் கம்பெனி நாடக சபையைத் தொடங்கி நடத்தியவர். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட நடிகர்கள், உடுமலை நாராயண கவி, தஞ்சை இராமையா தாஸ் உள்ளிட்ட கவிஞர்கள் இந்த நாடக சபையில் பயிற்சி பெற்றவர்கள். 68 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஆனால் 16 நாடகப் பிரதிகளே […]

Read more

நாடக இசைக் களஞ்சியம்

நாடக இசைக் களஞ்சியம், சங்கரதாஸ் சுவாமிகள், அரிமளம் சு.பத்மநாபன், காவ்யா, விலை 330ரூ. நாடக இசைக் களஞ்சியம் என்ற மையக்கருத்தை முன்னிறுத்தி முழுமையாக எழுதப்பட்ட நூல். இதில் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் கூறியுள்ள இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய 2 தனிப்பண்புகளும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் நாடகத் தமிழ் குறித்தும், நாடகத்திற்கான இசையின் பங்களிப்பு குறித்தும், இயல், இசை, நாடக அறிஞர்களிடமும், ஆய்வாளர்களிடமும், புதிய சிந்தனைகளையும், தேடுதல்களையும் இந்த நூல் உருவாக்கியுள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

அவ்வையார் வரலாற்று நாடகக் காப்பியம்

அவ்வையார் வரலாற்று நாடகக் காப்பியம், கவிஞர் அவ்வை நிர்மலா, விழிச்சுடர்ப் பதிப்பகம், விலை 400ரூ. சங்க காலத்தில் வாழ்ந்த அவ்வையாரைக் கதைக்களனாகக் கொண்டு, கவிஞர் அவ்வை நிர்மலா எழுதிய வரலாற்று நாடகக் காப்பியம். நாடகம் முழுவதும் மரபுக் கவிதைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து அங்கங்கள் ஒவ்வொன்றிலும் எட்டுக் காட்சிகள். 61 நாடகக் கதை மாந்தர்கள் என 12,345 அடிகளில் ஓர் அருமையான காப்பியத்தைப் படைத்துள்ளார். இது இருபதாம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் கவிதை நாடகம் என்றால் அது மிகையல்ல. “அரிய உழைப்பு, ஆழ்ந்த படிப்பு, ஆற்றல் […]

Read more

வெடிச்சிரிப்பு

  வெடிச்சிரிப்பு, அ.மா.சாமி, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. ஏராளமான கதை கட்டுரைகளை எழுதி வாசகர்களிடம் புகழ் பெற்ற ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா.சாமி எழுதியுள்ள நகைச்சுவை நூல் வெடிச்சிரிப்பு. இதில் 5 நாடகங்கள் உள்ளன. கதைகளை நகைச்சுவையுடன் எழுதுவது அ.மா.சாமிக்கு கைவந்த கலை. எனவே இந்த நகைச்சுவை நாடகங்கள் வாசகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் வியப்பில்லை. நன்றி: தினத்தந்தி, 1/11/2017

Read more

வெளிச்சம்

வெளிச்சம், முனைவர் ஆ.ஸ்டீபன், ஈ. குழந்தைசாமி, காகிதம் பதிப்பகம், விலை 60ரூ. குறும்படமாகத் தயாரிக்கப்பட்ட “வெளிச்சம்” நாடகம். இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது. பார்ப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் சுவையான நாடகம். நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், டி.வி. ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தகநிலையம், விலை 100ரூ. தமிழ் நாடக மேடை முதன் முதலில் தோன்றியதிலிருந்து இன்று வரை கண்டிருக்கும் மாற்றம், ஏற்றம் என்று அத்தனையையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். கடைச்சங்க காலம் முதலே நாடகக் கலை இருந்தது என்பது முதல், தமிழ் நாடகக் கலைக்கு வித்திட்ட சி.கன்னையா, சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்தம் முதலியார் என்று நாடகபிதாமகர்கள் பற்றிய தகவல்கள், அக்காலத்திய பிரபல நாடகங்கள், தற்காலத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நாடகக்குழுக்கள், அவர்களின் சிறந்த நாடகங்கள் […]

Read more
1 2 3 4 5 7