விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள்

விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள், அ.மா.சாமி, கலாம் பதிப்பகம், விலை 250ரூ. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு எத்தகையது என்பதை எடுத்துரைக்கும் நூல் இது. மொழி, இனம், நாடு, என்பதைத்தாண்டி தமிழ்நாட்டு முஸ்லிம்களின் மொழிப்பற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026805.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வெடிச்சிரிப்பு

  வெடிச்சிரிப்பு, அ.மா.சாமி, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. ஏராளமான கதை கட்டுரைகளை எழுதி வாசகர்களிடம் புகழ் பெற்ற ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா.சாமி எழுதியுள்ள நகைச்சுவை நூல் வெடிச்சிரிப்பு. இதில் 5 நாடகங்கள் உள்ளன. கதைகளை நகைச்சுவையுடன் எழுதுவது அ.மா.சாமிக்கு கைவந்த கலை. எனவே இந்த நகைச்சுவை நாடகங்கள் வாசகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் வியப்பில்லை. நன்றி: தினத்தந்தி, 1/11/2017

Read more

வேர்

வேர், அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், விலை 240ரூ. குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் முதலிய புனை பெயர்களில் பல நாவல்கள் எழுதியுள்ள அ.மா. சாமி, இப்போது தன் சொந்தப் பெயரில் எழுதியுள்ள புதிய நாவல் ‘‘வேர்”. லஞ்சத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. “லஞ்சம் எப்படித் தோன்றுகிறது? அதற்குக் காரணம் யார்?” என்று ஆராயும் ஆசிரியர், பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். லஞ்சத்தை ஒழிப்பதற்கான வழிகளையும் கூறுகிறார். துள்ளல் நடையில் நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் அ.மா. சாமி. நன்றி: […]

Read more

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை, அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், சென்னை, விலை 240ரூ. பாமரர்களையும் படிக்க வைத்த பத்திரிகை உலக முடிசூடா மன்னர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர். போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைவிலங்கு போடப்பட்ட ஒரே அரசியல் தலைவர். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை சந்தித்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சிமிக்க நடையில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி. ஆதித்னாருடன் […]

Read more