விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள்

விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள், அ.மா.சாமி, கலாம் பதிப்பகம், விலை 250ரூ. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு எத்தகையது என்பதை எடுத்துரைக்கும் நூல் இது. மொழி, இனம், நாடு, என்பதைத்தாண்டி தமிழ்நாட்டு முஸ்லிம்களின் மொழிப்பற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026805.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி.கா. மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், விடுதலைப் போராட்டவீரர், சீறாப்புராண உரையாசிரியர் என்று பன்முக அடையாளம் கொண்ட கவி.கா. மு. ஷெரீப், தமிழ் இலக்கியத்துக்கு இஸ்லாமிதயர் ஆற்றியிருக்கும் அரும்பணிக்கு அடையாளமாகவும் திகழ்பவர். உயிர் நேயம் மனித உணர்வின் உச்சம். இதை இஸ்லாம் இயல்பான வாழக்கை முறைக்குள் எந்தளவு நடைமுறைச் சாத்தியமாகியிருக்கிறது என்பதை தனது ஆய்வு அறிவின் மூலம் ஆதாரங்களோடு விளக்கும் நூல் இது. சமூக நல்லிணக்கம் நாடுவோர் அவசியம் படிக்க வேண்டிய […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி கா.மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், விலை 50ரூ. புலால் உண்ணும் முஸ்லிம்களுக்கும், ஜீவ காருண்யத்திற்கும் என்ன தொடர்பு என்று சிலர் வினவலாம். ஆனால் இந்த நூலில் ஜீவ காருண்யம் என்பது வேறு, புலால் உண்பது என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்து பார்க்க வேண்டியவை என்பதே கவி கா.மு.ஷெரீப் ஆய்வு செய்து எழுதியுள்ளார். மேலும் ஜீவகாருண்ம் – புலால் உணவு ஆகியவைகளில் உலகப் பெரும் சமயங்களின் கொள்கை, கோட்பாடுகளையும் அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.   […]

Read more

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கவி காமு.ஷெரீப், கலாம் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ. இஸ்லாம் இந்து மதத்திற்கு மட்டுமின்றி வேறெந்த மதத்திற்கும் விரோதி அல்ல என்பதையும், வாள் கொண்டு இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதையும் கவி காமு.ஷெரீப் ஆதாரங்களுடன் விளக்குகிறார். இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —- ஆங்கிலத்தில் கு. அழகிரிசாமியின் சிறுகதைகள், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 130ரூ. மறைந்த தமிழ் எழுத்தாளர் கு. அழகிரிசாமி, சிறுகதைகள் எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய […]

Read more

பாரதியார் ஆய்வுக்கோவை

பாரதியார் ஆய்வுக்கோவை, கங்கை புத்தகநிலையம், சென்னை, விலை 250ரூ. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் என்ற கொள்கையோடு உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞர் மகாகவி பாரதியார். அவரது 125வது பிறந்த நாள் விழாவையொட்டிச் சிறப்பு வெளியீடாக வந்தது இந்த நூல். இதில் 80 அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. பாரதியாருடைய படைப்புகளைப்பற்றி மதிப்பீடாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவரது கவித்திறம், உரைத்திறம், உவமைநலம், கற்பனை வளம், அணிநயம், பாரதியாரின் வரலாறு, வாழ்வியல் அனுபவங்கள், அவரது அரசியல், ஆன்மிக, […]

Read more

த லவ்வர்ஸ் பார்க்

த லவ்வர்ஸ் பார்க், வரலொட்டி ரெங்கசாமி, வி.எஸ்.ஆர். பப்ளிகேஷன்ஸ், 11, வெங்கட்ராமன் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை 625 002, பக். 224, விலை 200ரூ. பிரபல தமிழ் நாவல், சிறுகதை எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, எளிமையான ஆங்கிலத்தில் எழுதியுள்ள அருமையான நாவல். எல்லோருக்கும் புரியும்படியான ஆங்கில உரையாடல்கள். நாம் சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கின்றன கதாபாத்திரங்கள். இவர்கள் நமக்கு அன்னியமாக தெரியவில்லை. நாம் சந்திக்கும் அன்றாட மனிதர்கள்… கதைக்களமான மதுரை ஈகோ பார்க்கில் வலம் வருகிறார்கள். இந்த நாவலை படித்து முடிக்கும்போது, நம்மை […]

Read more