இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?
இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கவி காமு.ஷெரீப், கலாம் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ.
இஸ்லாம் இந்து மதத்திற்கு மட்டுமின்றி வேறெந்த மதத்திற்கும் விரோதி அல்ல என்பதையும், வாள் கொண்டு இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதையும் கவி காமு.ஷெரீப் ஆதாரங்களுடன் விளக்குகிறார். இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.
—-
ஆங்கிலத்தில் கு. அழகிரிசாமியின் சிறுகதைகள், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 130ரூ.
மறைந்த தமிழ் எழுத்தாளர் கு. அழகிரிசாமி, சிறுகதைகள் எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய அன்பளிப்பு என்ற சிறுகதைத் தொகுதி பிரபலமானது. அதை கி. கிப்ட் என்ற பெயரில் சாகித்ய அகாடமி ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார் எம்.பூபதி. நன்றி: தினத்தந்தி, 6/5/2015.
—-
நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி, க. காத்தப்பன், கலைமதி பதிப்பகம், கடலூர், விலை 75ரு.
நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மனின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.