த லவ்வர்ஸ் பார்க்
த லவ்வர்ஸ் பார்க், வரலொட்டி ரெங்கசாமி, வி.எஸ்.ஆர். பப்ளிகேஷன்ஸ், 11, வெங்கட்ராமன் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை 625 002, பக். 224, விலை 200ரூ.
பிரபல தமிழ் நாவல், சிறுகதை எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, எளிமையான ஆங்கிலத்தில் எழுதியுள்ள அருமையான நாவல். எல்லோருக்கும் புரியும்படியான ஆங்கில உரையாடல்கள். நாம் சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கின்றன கதாபாத்திரங்கள். இவர்கள் நமக்கு அன்னியமாக தெரியவில்லை. நாம் சந்திக்கும் அன்றாட மனிதர்கள்… கதைக்களமான மதுரை ஈகோ பார்க்கில் வலம் வருகிறார்கள். இந்த நாவலை படித்து முடிக்கும்போது, நம்மை கற்றியுள்ள மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்வோம்.
—-
மலைச்சாமி ஐ.ஏ.எஸ். (ஓய்வு), அரசுப்பணி அரசியல் பணி, வாழ்க்கை வரலாறு, ராணிமைந்தன், கலாம் பதிப்பகம், 6, செகண்ட் மெயின் ரோடு, சி.ஐ.டி. காலனி, மயிலை, சென்னை 4, பக். 272, விலை 160ரூ.
ஒரு அரசு உயரதிகாரி மற்றும் அரசியல்வாதியின் வாழ்க்கையை இப்புத்தகத்தில் காணலாம். மலைச்சாமியின் அபார துணிச்சல் பற்றி அறிய ஆவல் கொண்ட அனைவரும் கொஞ்சம் முரட்டுத்தனமாய் என்ற தலைப்பில் உள்ள விஷயங்களை படித்தால் வியந்து போவார். இந்நூலில் உள்ளவை உண்மைத் தகவல்கள் என்பதும் முன்னுரையில் மலைச்சாமி தரும் உறுதியாகும். இதேபோல தமிழகத்தில் உள்ள பல அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் நூலாக வெளிவந்தால், தமிழ்ப் புத்தக வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். நன்றி: தினமலர், 1/4/2012.