இஸ்லாமும் ஜீவகாருண்யமும்
இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி கா.மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், விலை 50ரூ.
புலால் உண்ணும் முஸ்லிம்களுக்கும், ஜீவ காருண்யத்திற்கும் என்ன தொடர்பு என்று சிலர் வினவலாம். ஆனால் இந்த நூலில் ஜீவ காருண்யம் என்பது வேறு, புலால் உண்பது என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்து பார்க்க வேண்டியவை என்பதே கவி கா.மு.ஷெரீப் ஆய்வு செய்து எழுதியுள்ளார். மேலும் ஜீவகாருண்ம் – புலால் உணவு ஆகியவைகளில் உலகப் பெரும் சமயங்களின் கொள்கை, கோட்பாடுகளையும் அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.
—-
எக்காலத்திலும் பெருகிவரும் ஆக்கிரமிப்பு பிரச்சினை, நீதிபதி எஸ். ஜெகதீசன், ஹிக்கின் பாதம்ஸ் மற்றும் சி. சீத்தாராமன் அண்டு கோ, விலை 200ரூ.
சமீப காலங்களாக ஏரிகள், சாலைகள், நடைபாதைகள் போன்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான முழுவிவரங்கள், பத்திரிகைகளில் வந்த செய்திகள், நிதிமன்றங்களின் தீர்ப்புகளை முழுமையாக விளக்கும் வகையில் ஆங்கிலத்தில் விவரமாக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ஜெகதீசன் ‘எக்காலத்திலும் பெருகிவரும் ஆக்கிரமிப்புகளின் பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் மிகவிவரமாக எழுதி உள்ளார். படிக்கும் ஒவ்வொருவருக்கும் சமூக சிந்தனையையும், சமூக கடமையையும் உருவாக்கும் உயரிய நூல் இது. நன்றி: தினத்தந்தி, 19/8/2015.