வேர்
வேர், அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், விலை 240ரூ.
குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் முதலிய புனை பெயர்களில் பல நாவல்கள் எழுதியுள்ள அ.மா. சாமி, இப்போது தன் சொந்தப் பெயரில் எழுதியுள்ள புதிய நாவல் ‘‘வேர்”. லஞ்சத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
“லஞ்சம் எப்படித் தோன்றுகிறது? அதற்குக் காரணம் யார்?” என்று ஆராயும் ஆசிரியர், பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். லஞ்சத்தை ஒழிப்பதற்கான வழிகளையும் கூறுகிறார். துள்ளல் நடையில் நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் அ.மா. சாமி.
நன்றி: தினத்தந்தி, 22/3/2017.