புத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி, ஈ.அன்பன், திரிபீடக தமிழாக்க நிறுவனம், விலை 150ரூ.

புத்தரின் வரலாற்றையும், அவருடைய போதனைகளையும் விரிவாக விளக்கும் நூல். மன்னராக வாழ்ந்தவர், மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக துறவியான சம்பவம், உலகம் அதற்கு முன்போ பின்போ நடந்திராத ஒன்றாகும்.

எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. அதாவது புத்தர், கடவுள் நம்பிக்கை அற்றவர். நாத்திகர். ஆனால் பல நாடுகளில் புத்தரையே கடவுளாக வணங்குகிறார்கள்.

புத்தர் பிறந்த இந்தியாவில் புத்த மதம் வளரவில்லை என்றாலும், கடல் கடந்த பல நாடுகளில் புத்த மதம் வளர்ந்தோங்கியுள்ளது. தாய்லாந்து நாட்டில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மரகத புத்தர், தங்க புத்தர் சிலைகளைக் கொண்ட கோவில்கள் உள்ளன.

இந்த நூலை சிறப்பாக எழுதியுள்ள உபாசகர் ஈ.அன்பன் (அன்பு மலர்) பாராட்டுக்குரியவர்.

நன்றி: தினத்தந்தி, 22/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *