பயண சரித்திரம்

பயண சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ், விலை 333ரூ.

ஆதிகாலத்தில், உலகம் உருண்டையானதா, தட்டையானதா என்று மனிதனுக்குத் தெரியாது. படகுகளிலும், கப்பல்களிலும் வீரப்பயணம் மேற்கொண்டவர்களால்தான் உலகம் பற்றிய பல உண்மைகள் தெரிய வந்தன.

மாமன்னர் அலெக்சாண்டர், பாஹியான், யுவான்சுவாங், மார்க்கோபோலோ போன்றவர்கள் மேற்கொண்ட சாகசப் பயணங்கள், உலக வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றுள்ளன. இவர்களுடைய பயணம் பற்றிய விவரங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் வண்ணம் எழுதியுள்ளார் முகில்.

இதுவரை அதிகமாக அறியப்படாத பல புதிய செய்திகள் புத்தகத்தில் நிறைந்துள்ளன. உதாரணம், தன் குரு அரிஸ்டாட்டிலுக்கு இந்தியாவில் இருந்து அலெக்சாஸண்டர் எழுதிய கடிதம். எல்லோரும் படிக்க வேண்டிய, எல்லா நூல் நிலையங்களிலும் இடம் பெறவேண்டிய புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 22/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *