பயண சரித்திரம்

பயண சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ், விலை 333ரூ. ஆதிகாலத்தில், உலகம் உருண்டையானதா, தட்டையானதா என்று மனிதனுக்குத் தெரியாது. படகுகளிலும், கப்பல்களிலும் வீரப்பயணம் மேற்கொண்டவர்களால்தான் உலகம் பற்றிய பல உண்மைகள் தெரிய வந்தன. மாமன்னர் அலெக்சாண்டர், பாஹியான், யுவான்சுவாங், மார்க்கோபோலோ போன்றவர்கள் மேற்கொண்ட சாகசப் பயணங்கள், உலக வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றுள்ளன. இவர்களுடைய பயணம் பற்றிய விவரங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் வண்ணம் எழுதியுள்ளார் முகில். இதுவரை அதிகமாக அறியப்படாத பல புதிய செய்திகள் புத்தகத்தில் நிறைந்துள்ளன. உதாரணம், தன் குரு அரிஸ்டாட்டிலுக்கு இந்தியாவில் இருந்து […]

Read more

உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ், விலை 230ரூ. உணவு சம்பந்தமான விரிவான புத்தகம் இது. ஆனால் உணவு தயாரிப்பது எப்படி என்ற சமையல் புத்தகம் அல்ல. ஒவ்வொரு உணவின் ரிஷி மூலம் என்ன? அது எப்படி எங்கே கண்டுபிடிக்கப்பட்டு பிரபலம் ஆனது என்பது பற்றிய வியப்பான செய்திகளை ருசிகரமான முறையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். அல்வா, கொழுக்கட்டை, சாக்லேட், பலா போன்றவை பற்றிய அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 8/6/2016.   —- பெண் வாழப்பிறந்தவள் அல்ல ஆளப்பிறந்தவள், அரிமா கே.மூர்த்தி, […]

Read more

நெப்போலியன்

நெப்போலியன், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, விலை 300ரூ. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நெப்போலியன், பிரான்ஸ் நாட்டுச் சக்கரவர்த்தியாக உருவான வரலாற்றைக் கூறும் நூல். நெப்போலியனின் குடும்ப வாழ்க்கை, அந்தரங்கக் காதலிகள், அவர் நடத்திய வீரப் போர்கள், வாட்டர்லூ போரில் படுதோல்வி, ஹெலனா தீவில் சிறைவைப்பு, நாள்பட கொல்லும் விஷத்தால் மரணம் என்பன போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தி சுவைபடச் சொல்கிறார். மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டால் குலை நடுக்கம். வெயில் காலத்திலும் வெந்நீரில்தான் குளிப்பார், தினமும் […]

Read more

இந்த விநாடி

இந்த விநாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, பக். 200, விலை 150ரூ. கவிஞர் நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், சுய முன்னேற்றம் வகை புத்தகம் அல்ல, சுயத்தை மீட்டெடுக்கும் புத்தகம். எட்டு அத்தியாயத்திலும் எட்டு எளிய விஷயத்தை நமக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். அவை நமக்கு வெளியே இருப்பவை அல்ல. நமக்கு உள்ளே இருப்பவை. நம் உடலையும், மனதையும் சீரமைத்துக் கொள்வதற்கான எளிய வழி முறைகள். நம் பழக்க வழக்கங்களால், நம்பிக்கைகளால் விலகிச் சென்ற பாதையிலிருந்து, வழி தவறிய பாதையிலிருந்து அழைத்து சரியான பாதை […]

Read more

நரேந்திர மோடி

நரேந்திர மோடி, எஸ்.பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த்சென்ஸ், பக். 200, விலை 125ரூ. இன்றைய அரசியலின், சர்ச்சைக்குரிய மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய முகமாக பார்க்கப்படுவது மோடிதான். அவரது பிறப்பில் இருந்து, தற்போதைய பிரதமர் வேட்பாளர்வரை, அனைத்து விஷயங்களையும் இந்த புத்தகம் விளக்குகிறது. கோத்ரா கலவரம் தொடர்பாக, டில்லியில் உள்ள சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை அமைத்த நீதிபதி திவத்தியா குழுவின் விசாரணை முடிவுகளில் முக்கியமானவற்றை ஆசிரியர் இதில் சேர்த்திருக்கிறார். மேலும் 1964 முதல் 2002 வரை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த […]

Read more

பகத்சிங்

பகத்சிங், சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு, என். சொக்கன், சிக்ஸ்த்சென்ஸ், சென்னை 17, பக். 192, விலை 125ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-186-8.html பகத்சிங்கின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் சிறந்த படைப்பு. 17 தலைப்புகளில் நூலாசிரியர் அளித்திருக்கும் மொழி ஆளுமை படிக்கப் படிக்க சுகம். நவீன அச்சு முறை தகுந்த பழைய படங்களைச் சேர்த்திருத்தல், பக்க வடிவமைப்பு ஆகியவை நூலை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. பகத்சிங், இந்தியா கண்டெடுத்த ஒரு லட்சிய வீரன். சமரசமற்ற போராளி, நெஞ்சுரம் […]

Read more

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர்

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர், ம. நடராசன், தமிழ் அரசி பதிப்பகம், 189, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 16, விலை 300ரூ. உயிருக்கு நேராக தாய் மொழியைப் பார்த்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் நீண்ட வரலாற்றில் உணர்ச்சியும் கொந்தளிப்புமாக மொழியைக் காக்க நடந்த போராட்டம் எழுச்சியானது. தங்களுடைய உயிரைக் கொடுத்து மொழிகாக்க முயன்றவர்களின் உணர்வுகளால் தமிழகம் முழுக்க அலையடித்து எழுந்த போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், ஏராளமான உயிர்ப்பலிகள், ஆட்சி மாற்றங்கள் என்று துவங்கிய மொழிப் போராட்டம் இந்த மண்ணில் நிகழ்ந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. […]

Read more