இடிந்தகரை சிந்தனைகள்

இடிந்தகரை சிந்தனைகள், சுப. உதயகுமார், இலக்கியச் சோலை, சென்னை, விலை 60ரூ. கூடங்குளம் அணு மின்நிலையம் அமைப்பதற்கு எதிராக இடிந்தகரை மக்கள் நடத்திய போராட்டம் பற்றி சுப. உதயகுமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் கடல் விவசாயம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சாதி, மதம் கடந்து, சச்சரவுகள் துறந்து, உண்மை, ஒழுக்கம், உறுதியோடு ஆயிரம் நாட்கள் நாங்கள் நடத்தியது வெறும் போராட்டமல்ல. அது ஒரு தவம், வேள்வி, யாகம் என்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.   —- […]

Read more

நெப்போலியன்

நெப்போலியன், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, விலை 300ரூ. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நெப்போலியன், பிரான்ஸ் நாட்டுச் சக்கரவர்த்தியாக உருவான வரலாற்றைக் கூறும் நூல். நெப்போலியனின் குடும்ப வாழ்க்கை, அந்தரங்கக் காதலிகள், அவர் நடத்திய வீரப் போர்கள், வாட்டர்லூ போரில் படுதோல்வி, ஹெலனா தீவில் சிறைவைப்பு, நாள்பட கொல்லும் விஷத்தால் மரணம் என்பன போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தி சுவைபடச் சொல்கிறார். மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டால் குலை நடுக்கம். வெயில் காலத்திலும் வெந்நீரில்தான் குளிப்பார், தினமும் […]

Read more

காணாமல் போன கவிதைகள்

காணாமல் போன கவிதைகள், நெப்போலியன், தங்கதாய் வெளியீடு, புதுக்கோட்டை, விலை 40ரூ. நெப்போலியன் கவிதைகளைச் சமூக அக்கறை, கரிசனம் என்று சொல்ல முடியும். நெப்போலியன் காணாமல் போன கவிதைகள் தொகுப்பில் சுருக்கமாகவும் நேரிடையாகவும் பேசுகிறார். மனதில் பட்டதை மட்டும் இவர் எழுதவில்லை. சமூகத்திற்கு எவை தேவையோ, எவற்றைச் சொல்ல வேண்டுமோ அவற்றைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். வடிவ ரீதியான பரிசோதனைக்காக நெப்போலியன் கவிதைகளை எழுதவில்லை. மாறாக முற்றிலும் நகரமயமான வாழ்வின் நெருக்கடிகள், நவீன வாழ்வின் அபத்தங்கள் போன்றவையே கவிதைகள் ஆகியிருக்கின்றன. தான் பார்த்ததை, அனுபவித்ததை, வாழ்ந்ததை […]

Read more