இடிந்தகரை சிந்தனைகள்

இடிந்தகரை சிந்தனைகள், சுப. உதயகுமார், இலக்கியச் சோலை, சென்னை, விலை 60ரூ.

கூடங்குளம் அணு மின்நிலையம் அமைப்பதற்கு எதிராக இடிந்தகரை மக்கள் நடத்திய போராட்டம் பற்றி சுப. உதயகுமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் கடல் விவசாயம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சாதி, மதம் கடந்து, சச்சரவுகள் துறந்து, உண்மை, ஒழுக்கம், உறுதியோடு ஆயிரம் நாட்கள் நாங்கள் நடத்தியது வெறும் போராட்டமல்ல. அது ஒரு தவம், வேள்வி, யாகம் என்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.  

—-

  நெப்போலியன், சி. ஜெயபாரதன், ஓசோன் புக்ஸ், சென்னை, விலை 80ரூ.

போற்றல் பெருமிதத்தோடு நான் அதிவிரைவாகத் தாக்கி, உலகத்தை அதிர்ச்சியில் வியக்க வைப்பேன் என்று வீர முழக்கமிட்டு உலகை வென்றவர் பிரான்ஸ் சக்கரவர்த்தி நெப்போலியன். அவரது வீர வாழ்க்கையை ஜார்ஜ் பெர்னார்ட்ஷா நாடக வடிவில் ஆங்கிலத்தில் படைத்ததை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் சி. ஜெயபாரதன் (கனடா). நன்றி: தினத்தந்தி, 29/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *