நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், மருத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை வெறும் பொழுதுபோன்னு நாடகங்கள் அல்ல. ஒவ்வொரு நோயும் எதனால் வருகின்றன, அதற்கு சிகிச்சை என்ன, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை உணர்த்துகின்றன. எனவே, இதை ஒரு நாடக நூல் என்று கூறுவதைவிட, மருத்துவக் களஞ்சியம் என்று கூறுவதே பொருந்தும். மிகப் பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.
—-
சிவசிவக்கும் பிரியங்கள், கவிஞர் வீ. சிவசங்கர், அகநி, வந்தவாசி, விலை 50ரூ.
ரசனையான காதல் கவிதைகளைப் பந்தி வைத்துள்ளார் கவிஞர் வீ. சிவசங்கர். காதலிப்பவர்களும், கவிதையைக் காதலிப்பவர்களும் ரசித்து வாசிக்கக்கூடிய சிறு கவிதைத் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 29/4/2015.