ஈரம்

ஈரம், சிவசு, தென்றல் பதிப்பகம், புதுச்சேரி, பக். 91,விலை 100ரூ. எளிதில் புரியாத வரிகளைக் கொண்டு நவீனம் என்ற பெயரில் கவிதைகளாகப் படைக்கப்பட்டு வரும் தற்காலத்தில், எளிதில் புரியக்கூடிய தன்மை, ஆழமான சிந்தனை, உழைப்பின் வலியை, மேன்மையைச் சொல்லும் ரத்தினச் சுருக்கம் என்று கவிதைக்குரிய இலக்கணங்களைக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் ஈரம் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது. எதிர்படும் வீடுகளை கட்டடங்களை/மரங்களை, தோட்டங்களை/ விழுங்கியபடியே ஊர்ந்து வருகிறது/ நெடுஞ்சாலைப் பாம்பு என்ற ஒரு கவிதை போதும் அவரது பாடுபொருள் எத்தகையது. அவரது பார்வையின் விலாசம் எவ்வளவு என்பதை […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. எந்தக் கருத்தையும், வெறும் பேச்சு அறிவுரையாக இல்லாமல், கலையோடு இணைந்து வழங்கினால், அது மக்களை எளிதில் சென்றடையும் என்ற உண்மையறிந்து, சிறு நாடகங்கள் மூலம், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார், வானொலி அண்ணா என்றழைக்கப்படும் என்.சி. ஞானப்பிரகாசம். எலும்பு முறிவு முதல், பல் பாதுகாப்பு வரை 22 அத்தியாவசிய சுகாதார நலன் குறித்து, சிறு நாடகங்கள் இயற்றியுள்ளார். அத்தனை நாடகங்களும், நகைச்சுவை பின்னணியில் அமைந்திருப்பது, ஆசிரியரின் அனுபவத்தை வெளிக்காட்டி […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், மருத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை வெறும் பொழுதுபோன்னு நாடகங்கள் அல்ல. ஒவ்வொரு நோயும் எதனால் வருகின்றன, அதற்கு சிகிச்சை என்ன, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை உணர்த்துகின்றன. எனவே, இதை ஒரு நாடக நூல் என்று கூறுவதைவிட, மருத்துவக் களஞ்சியம் என்று கூறுவதே பொருந்தும். மிகப் பயனுள்ள நூல். நன்றி: […]

Read more