நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
எந்தக் கருத்தையும், வெறும் பேச்சு அறிவுரையாக இல்லாமல், கலையோடு இணைந்து வழங்கினால், அது மக்களை எளிதில் சென்றடையும் என்ற உண்மையறிந்து, சிறு நாடகங்கள் மூலம், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார், வானொலி அண்ணா என்றழைக்கப்படும் என்.சி. ஞானப்பிரகாசம். எலும்பு முறிவு முதல், பல் பாதுகாப்பு வரை 22 அத்தியாவசிய சுகாதார நலன் குறித்து, சிறு நாடகங்கள் இயற்றியுள்ளார். அத்தனை நாடகங்களும், நகைச்சுவை பின்னணியில் அமைந்திருப்பது, ஆசிரியரின் அனுபவத்தை வெளிக்காட்டி இருக்கிறது. மனிதர்கள் இரண்டு கால்களில் நடப்பதால், உடலின் எடை காரணமாக, முதுகு வலி வருகிறது உள்ளிட்ட, தகவல்கள் நாடகத்தை சுவாரசியமாக்குகின்றன. உடல் உறுப்பு சேதம், குழந்தை வளர்ப்பு, ஹெல்மெட் அவசியம் உள்ளிட்ட அனைத்தையும், அதற்காக மருத்துவரின் ஆலோசனையை, நாடகத்தில் இணைத்திருக்கும் லாவகம் பாராட்டுக்குரியது! மாணவர்கள் மூலம், பள்ளிகளில் இந்த நாடகங்களை அரங்கேற்றலாம்! மக்களிடம், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்! -சி. கலாதாம்பி. நன்றி: தினமலர், 12/7/2015.