அனுமன் கதைகள்
அனுமன் கதைகள், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, விலை 260ரூ.
ராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரமாக வலம் வருபவர் ஆஞ்சிநேயர். அவருடைய சாகசங்களை அனைவரும் அறிவோம். ஆனால் அவர் பிறப்பைப் பற்றி அறிந்தவர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். வானுலகில் இருந்து பூமிக்கு வந்த புஞ்சிக்ஸ் தலை என்ற அப்சரஸ் குரங்கு முகம் கொண்ட ஒரு முனிவரை கேலி செய்ததால், குரங்காகி விடுகிறாள். பிறகு சிவனை நோக்கி தவம் செய்ததால், சிவன் அவர் முன் தோன்றுகிறார். “சிறிது காலம் குரங்காய் வாழ்ந்து, மிகுந்த பராக்கிரமம் உடைய ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு மீண்டும் அப்சரசாக மாறுவாய் என்று வரம் கொடுக்கிறார். அஞ்சனாதேவி என்ற பெயருடம் வாழும் அவளை கேசரி என்ற வானரம் காதலித்து, மணம் செய்து கொள்கிறது. வாயுபகவான் அருளால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையே அனுமன். இப்படி ஏராளமான கதைகள் கொண்ட பொக்கிஷம் இந்த புத்தகம். திருப்பூர் கிருஷ்ணன் எழில் கொஞ்சும் நடையில் இக்கதைகளை எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.
—-
நவீன திருக்குறள் அல்லது அதிகார ஆராதனை, புலவர் பட்டணம் பழனிச்சாமி, வளர்கோலம் வெளியீடு, விலை 100ரூ.
திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் இடம் பெற்றுள்ள கருத்துக்களை எளிய நடையில் சந்தப்பாடல் வடிவில் நூலாசிரியர் எழுதி வெளியிட்டிருப்பது, பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 12/8/2015.