செல்லப் பிராணிகள் வளர்ப்பு
செல்லப் பிராணிகள் வளர்ப்பு, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ.
நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டாய் கூறப்படுவது நாய். காவல் காப்பதிலும், ஆபத்து காலத்தில் உதவுவதிலும் நாய்க்கு நிகரான விலங்கு இல்லை. அதுவே மனிதர்களின் செல்லப் பிராணிகளில் முதலிடம் பெறுகிறது. அத்தகைய நாய்களை முறையாக வளர்பப்து எப்படி? என்பது பற்றி பல சுவையான, சுவாரஸ்யமான தகவல்களை இந்த நூலில் ஆசிரியர் வாண்டு மாமா விவரித்துள்ளார். மேலும் பூனை வளர்ப்பு, முயல் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வெள்ளெலி, சீமைப் பெருச்சாளி, தேனீ வளர்ப்பு போன்றவை பற்றியும் இந்த நூலில்இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 12/8/2015.
—-
உலக விஞ்ஞானிகள், தொகுப்பாசிரியர் சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ.
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் தொடங்கி நுண்ணுயிரியல் மேதை ஆண்டனிவான் லீவன் ஹாக் வரையிலான 51 விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். சுருக்கமாக இருந்தாலும் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.