நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு

நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு, எஸ்.டி.வி., விக்டோரியா பதிப்பகம், பக். 408, விலை 300ரூ. நகைச்சுவை அரசர் சந்திரபாபுவைப் பற்றி எப்படி, இத்தனைத் தகவல்களை ஆசிரியர் சேகரித்தார் என்று, வியக்கும் வண்ணம், அத்தனைத் தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்த நூல். பாபு நடித்த படங்களிலிருந்து, 300க்கும் அதிகமான புகைப்படங்கள், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளன. சந்திரபாபுவின் படங்கள், பாடல்கள், வாழ்க்கைத் தகவல்கள் என்ற மும்முனைத் தேடலில், ஐந்தாண்டுகள் மூழ்கி முத்துக்களை எடுத்துத் தந்திருக்கிறார் சொர்ணராஜன், தி. விக்டோரியா (எஸ்.டி.வி.). -எஸ். குரு. நன்றி: […]

Read more

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர்

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர், ம. நடராசன், தமிழ் அரசி பதிப்பகம், 189, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 16, விலை 300ரூ. உயிருக்கு நேராக தாய் மொழியைப் பார்த்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் நீண்ட வரலாற்றில் உணர்ச்சியும் கொந்தளிப்புமாக மொழியைக் காக்க நடந்த போராட்டம் எழுச்சியானது. தங்களுடைய உயிரைக் கொடுத்து மொழிகாக்க முயன்றவர்களின் உணர்வுகளால் தமிழகம் முழுக்க அலையடித்து எழுந்த போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், ஏராளமான உயிர்ப்பலிகள், ஆட்சி மாற்றங்கள் என்று துவங்கிய மொழிப் போராட்டம் இந்த மண்ணில் நிகழ்ந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. […]

Read more