நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு
நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு, எஸ்.டி.வி., விக்டோரியா பதிப்பகம், பக். 408, விலை 300ரூ.
நகைச்சுவை அரசர் சந்திரபாபுவைப் பற்றி எப்படி, இத்தனைத் தகவல்களை ஆசிரியர் சேகரித்தார் என்று, வியக்கும் வண்ணம், அத்தனைத் தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்த நூல். பாபு நடித்த படங்களிலிருந்து, 300க்கும் அதிகமான புகைப்படங்கள், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளன. சந்திரபாபுவின் படங்கள், பாடல்கள், வாழ்க்கைத் தகவல்கள் என்ற மும்முனைத் தேடலில், ஐந்தாண்டுகள் மூழ்கி முத்துக்களை எடுத்துத் தந்திருக்கிறார் சொர்ணராஜன், தி. விக்டோரியா (எஸ்.டி.வி.). -எஸ். குரு. நன்றி: தினமலர், 18/5/2014.
—-
ராக்ஃபெல்லர், கார்த்தீபன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 150., விலை 100ரூ.
ராக்பெல்லர் அறக்கட்டளை என்பது மட்டும் நம்மில் பல பேருக்கு நன்கு தெரியும். அந்த ராக்பெல்லரின் உழைப்பும், சாமர்த்தியமும், சாதனைகளும், அமெரிக்காவின் பொருளாதார, தொழில் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை என்பது அனேகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புத்தகம், அந்த உலக மகா செல்வந்திரின் பன்முக ஆளுமை பற்றி விரிவாக அலசி ஆராய்கிறது. சவால்களை எதிர்கொள்ளும் இந்தக் கோடீஸ்வர தொழிலதிபரின் வாழ்க்கையில் வெற்றிகள் அதிகமா? தோல்விகள் அதிகமா? இழப்புகள் அதிகமா? லாபங்கள் அதிகமா? ஏமாற்றம் அதிகமா? ஏமாற்றியது அதிகமா? படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். -ஜனகன். நன்றி: தினமலர், 18/5/2014.