குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007, குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 112, விலை 80ரூ. எழுத்துலகில் மிகப்பெரிய மைல்கல் குமுதம் ஒரு பக்கக் கதைகள். நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் பிரச்னைகள், போராட்டங்கள், அன்பு, காதல், பகை, போட்டி, பொறாமை இவைதான் இந்த ஒரு பக்கக் கதைகளின் கருவாக அமைந்துள்ளன. பிரச்னைகளை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வையும் இந்த சின்னஞ்சிறு கதைகளிலேயே அதன் ஆசிரியர்கள் வைத்திருப்பது வியப்பு. இவர்கள் தொடாத பொருளே இல்லை என்கிற அளவிற்கு […]

Read more

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர்

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர், ம. நடராசன், தமிழ் அரசி பதிப்பகம், 189, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 16, விலை 300ரூ. உயிருக்கு நேராக தாய் மொழியைப் பார்த்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் நீண்ட வரலாற்றில் உணர்ச்சியும் கொந்தளிப்புமாக மொழியைக் காக்க நடந்த போராட்டம் எழுச்சியானது. தங்களுடைய உயிரைக் கொடுத்து மொழிகாக்க முயன்றவர்களின் உணர்வுகளால் தமிழகம் முழுக்க அலையடித்து எழுந்த போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், ஏராளமான உயிர்ப்பலிகள், ஆட்சி மாற்றங்கள் என்று துவங்கிய மொழிப் போராட்டம் இந்த மண்ணில் நிகழ்ந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. […]

Read more