குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. பரபரப்பான இந்த உலகில் ஒரே மூச்சில் படித்து விட வேண்டும். அதே சமயம் ஒரு சிறுகதையைப் படித்த திருப்தி கிட்ட வேண்டும் என்ற வாசகர்களின் எண்ணத்தை குமுதம் ஒரு பக்கக் கதைகள்தான் தீர்த்து வைத்தன. கதை எழுத ஆர்வம் உள்ள அனைவரையும் குறிப்பாக வாசகர்களையும் எழுதவைத்தது இந்தக் கதைகள்தான். அன்றாட வாழ்வில் நடக்கும் எந்த ஒன்றையும் இந்தக் கதைகள் விட்டு வைத்ததேர இல்லை. கொலை மனசு, நூலைப்போல, […]

Read more

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007, குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 112, விலை 80ரூ. எழுத்துலகில் மிகப்பெரிய மைல்கல் குமுதம் ஒரு பக்கக் கதைகள். நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் பிரச்னைகள், போராட்டங்கள், அன்பு, காதல், பகை, போட்டி, பொறாமை இவைதான் இந்த ஒரு பக்கக் கதைகளின் கருவாக அமைந்துள்ளன. பிரச்னைகளை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வையும் இந்த சின்னஞ்சிறு கதைகளிலேயே அதன் ஆசிரியர்கள் வைத்திருப்பது வியப்பு. இவர்கள் தொடாத பொருளே இல்லை என்கிற அளவிற்கு […]

Read more

வீரம் விளைந்த தமிழ் பூமி

வீரம் விளைந்த தமிழ் பூமி, இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 150, விலை 100ரூ. தன் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக தன் இன்னுயிரை நீத்து சரித்திரம் படைத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் அவர்களில் பலரின் வீரம் பதிவு செய்யப்படாமலேயே கிடக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல் அதிக பிரபலமானவர்களே திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டுக்காட்டப்படும் சூழல் நிலவுகிறது. எத்தனையோ சாமானயிர்கள் அடித்தட்டு மக்கள் சிந்திய ரத்தம் வீரப்பதிவு பெறாமலேயே மறைந்துபோகும் அவலம் நடந்தேறிவருகிறது. மாவீரன் ஒண்டிவீரன், வீரன் பகடை, […]

Read more