கெடை காடு

கெடை காடு, ஏக்நாத், காவ்யா, சென்னை, பக். 184, விலை 170ரூ. ஒரு மலையடிவார கிராமத்தின் வாழ்வை காட்டின் வழி அசைபோடவைக்கும் நாவல். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்து கிராமம் கீழாம்பூர். ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலத்தில் போதிய உணவு கிடைக்காதபோது குள்ராட்டி காட்டிற்கு மாடுகளை அழைத்துப்போய் கிடைபோட வைக்கிறார்கள். காடு மனிதர்களையும், ஆடுமாடுகளையும் உள்வாங்கிக்கொள்கிறது. அந்த கிராமத்தின் வாழ்வு காட்டிற்குள் காட்சிப்படுத்தப்படுகிறது. கிடைக்குத் தலைமை தாங்கும் நொடிஞ்சான் குட்டி, குள்ராட்டிக்கு கிடைபோடச் செல்லும் உச்சிமகாளி, கந்தையா, இராமசுப்பு, சேகரி, தவிட்டான் என்று ஒரு கிராமத்தின் […]

Read more

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. பரபரப்பான இந்த உலகில் ஒரே மூச்சில் படித்து விட வேண்டும். அதே சமயம் ஒரு சிறுகதையைப் படித்த திருப்தி கிட்ட வேண்டும் என்ற வாசகர்களின் எண்ணத்தை குமுதம் ஒரு பக்கக் கதைகள்தான் தீர்த்து வைத்தன. கதை எழுத ஆர்வம் உள்ள அனைவரையும் குறிப்பாக வாசகர்களையும் எழுதவைத்தது இந்தக் கதைகள்தான். அன்றாட வாழ்வில் நடக்கும் எந்த ஒன்றையும் இந்தக் கதைகள் விட்டு வைத்ததேர இல்லை. கொலை மனசு, நூலைப்போல, […]

Read more

காஞ்சி மகானின் கருணை அலைகள்

காஞ்சி மகானின் கருணை அலைகள், டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், செங்கைப்பதிப்பகம், செங்கல்பட்டு, விலை 300ரூ. நடமாடும் தெய்வமாக போற்றப்பட்ட காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு, அவர் ஆண்டுவாரியாக மேற்கொண்ட யாத்திரைகள் பற்றிய விவரங்கள், நாட்டின் பெரும் தலைவர்கள் அவரை சந்தித்தபோது நடைபெற்ற அதிசய-ருசிகர தகவல்கள் போன்றவை மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியுடன் அவர் நடத்திய உரையாடல்கள் சிந்திக்கவைக்கின்றன. இவற்றுடன் காஞ்சி மடாதிபதியை சந்தித்த பலரின் அற்புத அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. காஞ்சி மகானைப் பற்றி தெளிவாக அறிந்து […]

Read more