கெடை காடு

கெடை காடு, ஏக்நாத், காவ்யா, சென்னை, பக். 184, விலை 170ரூ.

ஒரு மலையடிவார கிராமத்தின் வாழ்வை காட்டின் வழி அசைபோடவைக்கும் நாவல். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்து கிராமம் கீழாம்பூர். ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலத்தில் போதிய உணவு கிடைக்காதபோது குள்ராட்டி காட்டிற்கு மாடுகளை அழைத்துப்போய் கிடைபோட வைக்கிறார்கள். காடு மனிதர்களையும், ஆடுமாடுகளையும் உள்வாங்கிக்கொள்கிறது. அந்த கிராமத்தின் வாழ்வு காட்டிற்குள் காட்சிப்படுத்தப்படுகிறது. கிடைக்குத் தலைமை தாங்கும் நொடிஞ்சான் குட்டி, குள்ராட்டிக்கு கிடைபோடச் செல்லும் உச்சிமகாளி, கந்தையா, இராமசுப்பு, சேகரி, தவிட்டான் என்று ஒரு கிராமத்தின் அத்தனை பிரதிநிதிகளையும் மண்மணம் மாறாமல் தந்துவிட்டார். கிணற்றுக் குளியல் முதல் பஞ்சாயத்துவரை ஒரு மலையடிவாரக் கிராமத்தின் அனுபவத்தை கிடைக்காடு விழ சொல்லியிருப்பது தமிழ் நாவலுக்கு புதிது. அடுத்த தலைமுறைக்கு கிராமத்தை எடுத்துச் செல்லும் முயற்சி சிறப்பு. நன்றி: குமுதம், 2/7/2014.  

—-

காஞ்சி மகானின் கருணை அலைகள், டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், செங்கை பதிப்பகம், செங்கல்பட்டு, பக். 332, விலை 300ரூ.

காஞ்சி மகானின் வாழ்க்கைச் சரித்திரத்தைச் சொல்வதோடு, அவரது பக்தர்களின் பக்தி அனுபவத்தையும் சேர்த்துத் தந்திருப்பது நூலை மற்ற நூலிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. நாம் வாழுகின்ற காலத்தில் வாழ்ந்த தெய்வம் மகாப் பெரியவர் என்பதை எடுத்துச் சொல்லும் இடங்கள் ஏராளம். இந்த பூமியில் அவர் நம்மோடு வாழ்ந்த ஒவ்வொரு மணித்துணிகளுமே ஒரு சரித்திரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெரியவரின் பிறப்பு, படிப்பு, வளர்ப்பு, சுவாமிநாதன் மகாப் பெரியவரான நிகழ்வு என்று ஒன்றுவிடாமல் நம்மை நூல்வழி தரிசிக்க வைக்கிறார் ஆசிரியர். நன்றி: குமுதம், 2/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *