அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை

அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை, தொகுப்பாசிரியர் முனைவர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1000ரூ. “அ.ச.ஞா.” என்று அன்புடன் அழைக்கப்படும் அ.ச.ஞானசம்பந்தனார் மிகப்பெரும் தமிழறிஞர். கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன், நாவலார் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் இவருடன் படித்தவர்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 14 ஆண்டுகள் பணியாற்றியபின், சென்னை வானொலி நிலையத்தில் நாடகத் தயாரிப்பாளராகவும், பின்னர், தமிழக அரசு செய்தித் துறையில் மொழிபெயர்ப்புத் துறை இணை இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர், தமிழ் வெளியீட்டுத்துறை இயக்குனர், மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் முதலிய பதவிகளை வசித்தார். ஏராளமான நூல்களை […]

Read more

வ.ரா. கதைக்களஞ்சியம்

வ.ரா. கதைக்களஞ்சியம், தொகுப்பாசிரியர் முனைவர் சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, விலை 850ரூ. “அக்கிரகாரத்து அதிசய மனிதர்” என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் “வ.ரா.” (வ. ராமசாமி), 1889-ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். 1919?ல் மகாத்மா காந்தியும், மகாகவி பாரதியும் சந்தித்தபோது உடன் இருந்தவர். 1920 -ல் “சுதந்திரன்” என்ற சொந்த இதழை நடத்தியபோது, “கல்கி”யின் முதல் நாவலான “விமலா”வை தமது பத்திரிகையில் வெளியிட்டவர். 1933-ல் டி.எஸ். சொக்கலிங்கம், கு. சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து இவர் தொடங்கிய “மணிக்கொடி” இலக்கிய இதழ், புதுமைப்பித்தன் போன்றவர்களை […]

Read more

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007, குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 112, விலை 80ரூ. எழுத்துலகில் மிகப்பெரிய மைல்கல் குமுதம் ஒரு பக்கக் கதைகள். நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் பிரச்னைகள், போராட்டங்கள், அன்பு, காதல், பகை, போட்டி, பொறாமை இவைதான் இந்த ஒரு பக்கக் கதைகளின் கருவாக அமைந்துள்ளன. பிரச்னைகளை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வையும் இந்த சின்னஞ்சிறு கதைகளிலேயே அதன் ஆசிரியர்கள் வைத்திருப்பது வியப்பு. இவர்கள் தொடாத பொருளே இல்லை என்கிற அளவிற்கு […]

Read more