வ.ரா. கதைக்களஞ்சியம்

வ.ரா. கதைக்களஞ்சியம், தொகுப்பாசிரியர் முனைவர் சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, விலை 850ரூ.

“அக்கிரகாரத்து அதிசய மனிதர்” என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் “வ.ரா.” (வ. ராமசாமி),

1889-ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். 1919?ல் மகாத்மா காந்தியும், மகாகவி பாரதியும் சந்தித்தபோது உடன் இருந்தவர். 1920 -ல் “சுதந்திரன்” என்ற சொந்த இதழை நடத்தியபோது, “கல்கி”யின் முதல் நாவலான “விமலா”வை தமது பத்திரிகையில் வெளியிட்டவர்.

1933-ல் டி.எஸ். சொக்கலிங்கம், கு. சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து இவர் தொடங்கிய “மணிக்கொடி” இலக்கிய இதழ், புதுமைப்பித்தன் போன்றவர்களை புகழின் சிரத்துக்கு கொண்டு போக உதவியது.

“வ.ரா.” எழுதிய சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயம், கோதைத்தீவு, கற்றது குற்றமா ஆகிய 5 நாவல்களும், ராமானுஜர் நாடகமும் இந்த நூலில் அடங்கியுள்ளன. “வ.ரா.”வின் 125-வது ஆண்டையொட்டி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

வ.ரா.”வின் சிறந்த படைப்புகளை படிக்க, ரசிக்க, பாதுகாக்க இந்த புத்தகம் உதவும்.

நன்றி: தினத்தந்தி, 11/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *