பால்வெளி (பேரண்டர் கவிதைகள்),

பால்வெளி (பேரண்டர் கவிதைகள்), கவிஞர் சி. ராமலிங்கம், மேன்மை வெளியீடு, பக். 192, விலை 150ரூ.

மக்கள் மொழியில் மக்கள் பிரச்னையை முதன் முதலில் தமிழ்க் கவிதையில் பேசியவர் என்ற சிறப்பு பாரதிக்கே உண்டு. எதிலும் நடந்த வழியே நடந்து செல்லாமல் புதிய வழியில் செல்வோரைத்தான் வரலாறு பதிவு செய்யும், அந்த வகையில் தமிழ்க் கவிதையில் முதன் முதலில் அறிவியல் கருத்துக்களைப் பேசிய சிறப்பு இந்த நூலாசிரியர் கவிஞர் சி. ராமலிங்கத்தையே சேரும்.

பேரண்டம் குறித்த செய்திகளை இன்றைய செய்யுள் வடிவமான புதுக்கவிதையாகச் சொல்ல விழைகிறார். தனி மனித வாழ்க்கையானாலும், சமூக வாழ்க்கையானாலும் நாம் வாழ்வது அறிவியலார்ந்த வாழ்க்கையே. எல்லா காலக்கட்டங்களிலும் அறிவியல் மனித வாழ்க்கைக்கு நெம்புகோலாக இருந்திருக்கிறது.

ஆனால், மதம் பல கண்டுபிடிப்புகளையும், கண்டு பிடிப்பாளர்களையும் தன் கோரப் பற்களால் கடித்துக் குதறியிருக்கிறது. கொன்றும் தீர்த்திருக்கிறது. கலிலியோ, கோபர் நிக்கஸ். புரூனோ போன்ற அறிவியல் அறிஞர்களின் சிந்தனைப் போராட்டங்களையும், அவர்கள் சந்தித்த ஒடுக்கு முறைகளையும் கவிஞர் உருக்கத்துடன் பேசுகிறார். இது தமிழுக்கு புது வரவு!

-எஸ். குரு.

நன்றி: தினமலர், 19/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *