அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை
அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை, தொகுப்பாசிரியர் முனைவர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1000ரூ.
“அ.ச.ஞா.” என்று அன்புடன் அழைக்கப்படும் அ.ச.ஞானசம்பந்தனார் மிகப்பெரும் தமிழறிஞர். கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன், நாவலார் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் இவருடன் படித்தவர்கள்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 14 ஆண்டுகள் பணியாற்றியபின், சென்னை வானொலி நிலையத்தில் நாடகத் தயாரிப்பாளராகவும், பின்னர், தமிழக அரசு செய்தித் துறையில் மொழிபெயர்ப்புத் துறை இணை இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர், தமிழ் வெளியீட்டுத்துறை இயக்குனர், மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் முதலிய பதவிகளை வசித்தார்.
ஏராளமான நூல்களை எழுதியுள்ள இவருடைய முக்கியமான நூல் இது. சிறு வயது முதலே மேடையில் பேசி வந்தவர். அது பற்றிய அனுபவங்ளை சுவைபட எழுதியிருக்கிறார்.
குறிப்பாக, ராஜாஜியுடன் இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஆச்சரியமானவை. 969 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம், என்றாலும் இதை ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம்.
நன்றி: தினத்தந்தி, 9/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818