பகத்சிங்
பகத்சிங், சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு, என். சொக்கன், சிக்ஸ்த்சென்ஸ், சென்னை 17, பக். 192, விலை 125ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-186-8.html
பகத்சிங்கின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் சிறந்த படைப்பு. 17 தலைப்புகளில் நூலாசிரியர் அளித்திருக்கும் மொழி ஆளுமை படிக்கப் படிக்க சுகம். நவீன அச்சு முறை தகுந்த பழைய படங்களைச் சேர்த்திருத்தல், பக்க வடிவமைப்பு ஆகியவை நூலை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. பகத்சிங், இந்தியா கண்டெடுத்த ஒரு லட்சிய வீரன். சமரசமற்ற போராளி, நெஞ்சுரம் நிறைந்தவன். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்திரத் தீயைப் பற்ற வைக்க வேண்டும். அதுதான் பகத்சிங்கின் லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும். சுதந்திரம் தொட்டுவிடும் தூரத்தில்தான் என்று பரிபூரணமாக நம்பிய இளைஞர். அதை நோக்கியே தன் போராட்டக் களத்தைக் கட்டமைத்தார். பகத்சிங்கின் வீரமும் தியாகமும் இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது. இதனை இந்த நூல் சிறப்பாகப் பதிவு செய்கிறது. பதுங்கும் புலியாக, புத்தகக் காதலனாக, இறுதிவரை படிப்பைக் கைவிடாத இளைஞனாக, பகத்சிங் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் இளையோரைக் கவரும் விதத்தில் கொடுத்துள்ளார் நூலாசிரியர். சந்திரசேகர ஆசாத்தும் பகத்சிங்கும் லாகூரில் நிகழ்த்திய சாகசங்கள், தன்னைச் சந்திக்க வந்த குடும்பத்தினர் நண்பர்களிடம் இறுதிக் கட்டத்தில் கூட கண்ணீர் எதற்கு என்று தேற்றி அனுப்பி, வீரத்தை விதைத்த உருக்கமான நிகழ்வு, இவற்றைப் படிக்கும்போது நம் நெஞ்சில் வீரம் கிளர்ந்தெழும். இளைஞர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தின் அருமையை விதைக்கும் அற்புதப் படைப்பு இந்நூல். நன்றி: தினமணி, 3/3/2014.
—-
சுவடுகள் நெய்த பாதை, கவிஞர் பா. கிருஷ்ணன், தகிதா பதிப்பகம், 4/833, தீபம் பூங்கா, கே. வடமதுரை, கோயம்புத்தூர் 641017, விலை 60ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-209-1.html
மன ஊஞ்சல், தேடும் மகிழ்ச்சி இவ்வாறு 26 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள், படங்களுடன் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த கவிதைகள் அனைத்தும் புதிய முகத்தோடு முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளது. சமுதாய நடவடிக்கைகளை நூலாசிரியர் கூர்மையாகப் பார்த்து உணர்வுகளையும், சிந்தனைகளையும், கவிதைகளாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த கவிதை தொகுப்பை படிப்பதன் மூலம் நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 26/2/2014.
To buy this Tamil book online: