நெடுஞ்சாலை விளக்குகள்

நெடுஞ்சாலை விளக்குகள், ப.க.பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். ஆராய்ச்சிக் கூடத்தில் உலவும் அறிவுலகவாசிகளான ஆனந்த மூர்த்தி, மனினாடி, ரங்கநாதன் ஆகிய மூவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இந்த நாவல், ஆராய்ச்சிப் படிப்பு கால அனுபவம், அந்தக் காலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளைக் கொண்டு நடைபயில்கிறது. அறிவுலக மனிதர்களின் வேடங்கள், முகமூடிகள் களையப்பட்டு சில நிஜங்களை வாசகர்களின் பார்வைக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். கல்விப் பிரிவில் ஆழ்ந்த அனுபவமும், மிக உயர்ந்த பதவிகளில் இருந்து பெறப்பட்ட பட்டறிவும் ப.க. பொன்னுசாமியை ஒரு சிறந்த நாவலாசிரியராக இந்த படைப்பு […]

Read more

பகத்சிங்

பகத்சிங், சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு, என். சொக்கன், சிக்ஸ்த்சென்ஸ், சென்னை 17, பக். 192, விலை 125ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-186-8.html பகத்சிங்கின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் சிறந்த படைப்பு. 17 தலைப்புகளில் நூலாசிரியர் அளித்திருக்கும் மொழி ஆளுமை படிக்கப் படிக்க சுகம். நவீன அச்சு முறை தகுந்த பழைய படங்களைச் சேர்த்திருத்தல், பக்க வடிவமைப்பு ஆகியவை நூலை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. பகத்சிங், இந்தியா கண்டெடுத்த ஒரு லட்சிய வீரன். சமரசமற்ற போராளி, நெஞ்சுரம் […]

Read more

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்), ஜே.எம். சாலி எம்.ஏ, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இந்நூலாசிரியர், உலக முஸ்லிம்கள் தன் உயிரினும் மேலாக ஏற்றிப் போற்றும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்திய வேதங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்களை நாம் அனுப்பியிருக்கிறோம் – என்பது திருக்குர் […]

Read more