நெடுஞ்சாலை விளக்குகள்

நெடுஞ்சாலை விளக்குகள், ப.க.பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

ஆராய்ச்சிக் கூடத்தில் உலவும் அறிவுலகவாசிகளான ஆனந்த மூர்த்தி, மனினாடி, ரங்கநாதன் ஆகிய மூவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இந்த நாவல், ஆராய்ச்சிப் படிப்பு கால அனுபவம், அந்தக் காலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளைக் கொண்டு நடைபயில்கிறது. அறிவுலக மனிதர்களின் வேடங்கள், முகமூடிகள் களையப்பட்டு சில நிஜங்களை வாசகர்களின் பார்வைக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். கல்விப் பிரிவில் ஆழ்ந்த அனுபவமும், மிக உயர்ந்த பதவிகளில் இருந்து பெறப்பட்ட பட்டறிவும் ப.க. பொன்னுசாமியை ஒரு சிறந்த நாவலாசிரியராக இந்த படைப்பு இவரை உயர்த்தியிருக்கிறது. டாக்டர் மு.வ.வின் படைப்பிலக்கிய பாணியை நினைவுபடுத்தும் இவரது படைப்புகள், மாணவச் செல்வங்களால் பெரிதும் வரவேற்பைப் பெறும். -ஜனகன். நன்றி: தினமலர், 9/3/2014.  

—-

பகத்சிங், என். சொக்கன், சிக்ஸ்த் சென்ஸ், பக். 192, விலை 125ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-186-8.html இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து பின்பு உயிரையும் கொடுத்த பகத்சிங்கின் வீர வரலாறு பலரால் எழுதப்பட்டு முன்னரே வெளிவந்திருக்கிறது. இருப்பினும் 23 வயதிலேயே சாவை துச்சமென மதித்து தூக்கு மேடையில் மரணத்தை தழுவிய பகத்சிங்கின் சாகச வரலாற்றை ஒரு துப்பறியும் நாவலைப் படிப்பது போன்று பரபரப்பாக பக்கங்களைப் புரட்ட வைத்திருக்கிறர் நூலாசிரியர். -சிவா. நன்றி: தினமலர், 9/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *