பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?

பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?, ப.க.பொன்னுசாமி, கனவு வெளியீடு, விலைரூ.80. பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக பணியாற்றிய பேராசிரியரின் கட்டுரை தொகுப்பு நுால். சில கட்டுரைகள், அவர் படித்த கல்வி நிறுவனங்களை சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளன. இரண்டு தீபாவளி என்ற கட்டுரையில், சோக நிகழ்வுகள் சொல் ஓவியமாகியுள்ளன. மகன் நாவரசு நினைவுடனும், ஆழ்துளைக் குழாயில் உயிர் விட்ட சிறுவன் சுஜித் நினைவுடனும் வரைந்துள்ளார். சென்னையிலிருந்து புறப்படும் நிகழ்வை ஒரு கட்டுரையாக வடித்துள்ளார். சென்னை வரும்போது, மகன் இருந்தான்; நாய் ஜானியும் இருந்தது. போகும்போது மகனும் இல்லை; […]

Read more

நெடுஞ்சாலை விளக்குகள்

நெடுஞ்சாலை விளக்குகள், ப.க.பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். ஆராய்ச்சிக் கூடத்தில் உலவும் அறிவுலகவாசிகளான ஆனந்த மூர்த்தி, மனினாடி, ரங்கநாதன் ஆகிய மூவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இந்த நாவல், ஆராய்ச்சிப் படிப்பு கால அனுபவம், அந்தக் காலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளைக் கொண்டு நடைபயில்கிறது. அறிவுலக மனிதர்களின் வேடங்கள், முகமூடிகள் களையப்பட்டு சில நிஜங்களை வாசகர்களின் பார்வைக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். கல்விப் பிரிவில் ஆழ்ந்த அனுபவமும், மிக உயர்ந்த பதவிகளில் இருந்து பெறப்பட்ட பட்டறிவும் ப.க. பொன்னுசாமியை ஒரு சிறந்த நாவலாசிரியராக இந்த படைப்பு […]

Read more