குணங்குடி மஸ்தான் சாஹிப்

குணங்குடி மஸ்தான் சாஹிப்,  நாகூர் ரூமி,  கிழக்கு பதிப்பகம், பக்.96. விலை ரூ.120. இந்திய சூஃபிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள நூல், குணங்குடி மஸ்தான் சாஹிப். இஸ்லாமியராக இருந்தபோதிலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஞானியாக வாழ்ந்து மறைந்தவர் சுல்தான் அப்துல் காதிர் என்ற இயற்பெயரைக் கொண்டவரான குணங்குடி மஸ்தான் சாஹிப். அவரை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு கிடைக்கப் பெற்ற தரவுகளைத் தேவையானஅளவு பயன்படுத்தித் தக்க விதத்தில் முன்வைத்துள்ளார் ரூமி. அரபு உலக ஞானிகளுடன் ஒப்பிட்டுத் தொடங்கும்நாகூர் ரூமி, மருத்துவமும் மகத்துவமும் தமிழும் கலந்துறையும் சித்தராக மஸ்தான்பார்க்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். […]

Read more

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர், நாகூர் ரூமி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 175ரூ. நமக்கு நாமே தடை தி இந்து குழுமத்தின் ‘காமதேனு’ இணையதளத்தில் வெளியான 30 கட்டுரைகளின் தொகுப்பு. வெற்றிக்கு மட்டுமல்ல; தோல்விக்கும்கூட மனமே காரணமாக இருக்கிறது. தாழ்வுணர்ச்சிகளால், தவறான அபிப்ராயங்களால் உருவாக்கிக்கொள்ளும் மனத் தடைகள் வெற்றிக்கு எப்படி தடைக்கற்களாக மாறுகின்றன? அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருவது எப்படி என்பதை சாதனையாளர்களின் சரித்திரங்களை உதாரணம்காட்டி நம்பிக்கையூட்டுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான நாகூர் ரூமி. நன்றி: தமிழ் இந்து,16/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

இந்த விநாடி

இந்த விநாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, பக். 200, விலை 150ரூ. கவிஞர் நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், சுய முன்னேற்றம் வகை புத்தகம் அல்ல, சுயத்தை மீட்டெடுக்கும் புத்தகம். எட்டு அத்தியாயத்திலும் எட்டு எளிய விஷயத்தை நமக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். அவை நமக்கு வெளியே இருப்பவை அல்ல. நமக்கு உள்ளே இருப்பவை. நம் உடலையும், மனதையும் சீரமைத்துக் கொள்வதற்கான எளிய வழி முறைகள். நம் பழக்க வழக்கங்களால், நம்பிக்கைகளால் விலகிச் சென்ற பாதையிலிருந்து, வழி தவறிய பாதையிலிருந்து அழைத்து சரியான பாதை […]

Read more

நாகூர் நாயகம் அற்புத வரலாறு

நாகூர் நாயகம் அற்புத வரலாறு, நாகூர் ரூமி, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, விலை 140ரூ. இந்த விநாடி, அடுத்த விநாடி போன்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமீயின் இன்னொரு படைப்பு நாகூர் நாயகம் அற்புத வரலாறு. நாகூர்பதியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தவராஜ செம்மேரு என்று குணங்குடியார் போற்றி மகிழ்ந்த நாகூர் ஆண்டவர், மீரான் சாகிபு வலியுல்லாஹ், ஷாகுர்ஹமீது பாதுஷா, எஜமான் ஆண்டவர் என்றெல்லாம் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் புகழ்ந்து ஏற்றப்படுகின்ற இறைநேசகர் அப்துல் காதிர் அவ்லியாவின் வரலாற்றுத் தொகுப்பு […]

Read more

தாயுமானவள்

தாயுமானவள், நாகூர் ரூமி, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், மலர்மதி இல்லம், பெரியார் சிலை பெட்ரோல் பங்க் பின்புறம், காரைக்குடி 1, பக். 112, விலை 95ரூ. நம்முடைய பால்ய காலத்தின் ஞாபகப் பதிவில் ஏதாவது ஒரு வலி ஏறியிருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு ஒரு சாகாவரம் உண்டு. பெரியவர்கள் மட்டும்தான் துயரங்களை அனுபவிக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் பால்ய காலத்தை எழுதிக்கொண்டிருப்பது இந்தத் துயரங்களை அனுபவதித்ததால்தான். தாயுமானவள் நாவலும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. கதையைச் சொல்பவனின் சிறுவயது ஞாபகங்களாக இந்த நாவல் இருந்தாலும் […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம், ரா. முருகன், கிழக்கு பதிப்பகம், பக். 790, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html அரசூர் வம்சம் என்ற ஒரு நாவல் மூலம், தமிழ் நாவல் வாசகர்களின் கவனத்தை கவர்ந்த ரா. முருகன், அதன் தொடர்ச்சியாக இந்தப் பெரிய நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் தமிழ்நடை, சுஜாதாவை ஞாபகப்படுத்துகிறது. மிகப் பெரிய கதைக் களம், நிறைய கதாபாத்திரங்கள், அதிக சம்பவங்கள், நிகழ்ச்சிகள் என நாவல் வாசகனை அசத்துகிறது. மூன்று நாடுகள், எட்டு ஊர்கள், நான்கு கலாசாரச் சூழல்கள் ஊடே […]

Read more