விஸ்வரூபம்

விஸ்வரூபம், ரா. முருகன், கிழக்கு பதிப்பகம், பக். 790, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html

அரசூர் வம்சம் என்ற ஒரு நாவல் மூலம், தமிழ் நாவல் வாசகர்களின் கவனத்தை கவர்ந்த ரா. முருகன், அதன் தொடர்ச்சியாக இந்தப் பெரிய நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் தமிழ்நடை, சுஜாதாவை ஞாபகப்படுத்துகிறது. மிகப் பெரிய கதைக் களம், நிறைய கதாபாத்திரங்கள், அதிக சம்பவங்கள், நிகழ்ச்சிகள் என நாவல் வாசகனை அசத்துகிறது. மூன்று நாடுகள், எட்டு ஊர்கள், நான்கு கலாசாரச் சூழல்கள் ஊடே இழைகளாக கடந்துபோகும் இந்தக் கதையை படித்து முடிக்க நான்கு நாளாவது ஆபீசுக்கு லீவு போட வேண்டும். அல்லது ரிடையர்மென்ட் ஆன பின் படிக்க அமர வேண்டும். நேரத்தை ஒதுக்க வசதியும், நாவல் படிக்கும் ஆர்வமும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற வாசகர்களுக்கு, இதை விட நல்ல நாவல் கிடைப்பது அரிது. -ஜனகன். நன்றி: தினமல் 4/8/13.  

—-

 

மந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட், நாகூர் ரூமி, கல்கி பதிப்பகம், பக். 80, விலை 45ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-869-0.html

உணர்ச்சி வசப்படாமல், உணர்ச்சியை காட்டுவது என்பதுதான் எமோஷனல் இன்டலிஜென்ஸ் என்பது. அப்படி உணர்ச்சியோடு, அறிவைக் காப்பது எப்படி என்பதை பல உதாரணங்களோடு மிக சுவாரஸ்யமாக சொல்கிறார் ஆங்கில பேராசிரியரான நூலாசிரியர். (ஏ.எஸ். முகமது ரபி (நாகூர் ரூமி)) அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல. முன்பு கல்கியில் வெளிவந்த தொடர், தற்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. -மயிலை சிவா. நன்றி: தினமல் 4/8/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *