விட்டு விடுதலையாகி
விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா வெளியீடு, பக். 408, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-099-1.html
இது ஒரு சமூக நவீனம் தான் என்றாலும், வரலாற்றுச் சிறப்புடையதாகவும் மிளிர்கின்றது. மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்பது ஓர் உயரிய கருத்து வெளிப்பாடு. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்பது ஓர் ஆவேசக் கருத்தின் குரல். சரி, மாதர் தம்மை எப்படியெல்லாம், இந்தச் சமூகம் ஒரு காலத்தில் இழிவு செய்து கொண்டிருந்தது? இந்த மூன்றின் கலவையாக ஓர் நிதர்சனப்படப்பிடிப்பாக அமைந்த கதைக் களத்தில்தான், இக்கதை கட்டமைக்கப் பெற்றுள்ளது. கதாபாத்திரங்கள் கற்பனை என்றாலும், டாக்டர் முத்துலட்சுமியின் வார்படம் போன்ற நிஜ மாந்தர்களின் சாயலிலேயே, பல பாத்திரங்கள் உலவுகின்றன.அதன் காரணமாகப் புதினத்தின் கனம் கூடுகிறது எனலாம், -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமல் 4/8/13.
—-
வயது முதிர்ந்தோர்களுக்கான பல் பாதுகாப்பு, மருத்துவர் ஜி. தண்டபாணி, மருத்துவர் எஸ். சி. லோகநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 84, விலை 55ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-3.html
மனித உடல் உறுப்புகளில், பல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அத்தகு பெருமை பெற்ற பற்களின் பாதுகாப்பு, குறைகளை நீக்குதல் முதலியன குறித்து இந்நூல் விவரிக்கிறது. பற்கள் பாதுகாபபு, பராமரிப்பு பற்றிய பல புதிய செய்திகளை இந்நூலில் காணலாம். பற்களின் அமைப்புகளையும், பற்களின் பலவகை தோற்றங்களையும் படம் வரைந்தும், புகைப்படங்கள் வெளியிட்டும் விளக்கியுள்ளது. நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமல் 4/8/13