இந்த விநாடி
இந்த விநாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, பக். 200, விலை 150ரூ.
கவிஞர் நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், சுய முன்னேற்றம் வகை புத்தகம் அல்ல, சுயத்தை மீட்டெடுக்கும் புத்தகம். எட்டு அத்தியாயத்திலும் எட்டு எளிய விஷயத்தை நமக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். அவை நமக்கு வெளியே இருப்பவை அல்ல. நமக்கு உள்ளே இருப்பவை. நம் உடலையும், மனதையும் சீரமைத்துக் கொள்வதற்கான எளிய வழி முறைகள். நம் பழக்க வழக்கங்களால், நம்பிக்கைகளால் விலகிச் சென்ற பாதையிலிருந்து, வழி தவறிய பாதையிலிருந்து அழைத்து சரியான பாதை எது என்பதை இப்புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. தினசரி ஒரு நேரத்தைத் தேர்வு செய்து கொண்டு புத்தகத்தில் சொல்லியபடி மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதை உணர்த்துகிறார் ஆசிரியர். யு டர்ன் அடியுங்கள், சிகரெட், மது போன்ற பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழியைச் சொல்கிறது. விழித்துக்கொண்டே கனவு காணுங்கள் அத்தியாம் ஒரு லட்சித்தைய நோக்கி நம் பயணத்தை திசைத் திருப்புவதாக உள்ளது. ஈகோவில் நம் சுயத்தை எப்படி தனித்தன்மையுடன் வடிவமைத்துக் கொள்வது என்பதைக் குறித்துப் பேசுகிறார். இந்த கணத்தில் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வதன் அவசியத்தைப் பேசுகிறார் நேற்று இன்று நாளை அத்தியாயத்தில். இப்படி விஷயங்கள் எளிதானவை என்றாலும் ஆசிரியர் அதற்கு வழங்கும் உதாரணங்கள் சுவையானவை. அவரது பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும் இதற்கு நன்கு உதவுகிறது. நன்றி: தினமணி, 6/1/2015.
—-
சித்த மருத்துவ கையேடு, சேகர் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.
பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவ மருந்துகளைத் தயாரித்து உபயோகிக்கும் முறைகளைக் கூறுகிறார் டாக்டர் கே.எம். முருகேசன். குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்ட பல மருந்துகளைக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 11/2/2015.