தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை, துரை.குணசேகரன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.148. விலை ரூ.140.

இலக்கியப் பணிகள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை), இலக்கணம் (தொல்காப்பியம்), யாப்பிலக்கணம்(யாப்பருங்கலக்காரிகை), அகப்புற நூல்கள் (கலித்தொகை, புறநானூறு), அறநூல்கள் (நான்மணிக்கடிகை, ஏலாதி), பதிப்புப் பணிகள் (ச.மெய்யப்பன்), வள்ளுவம் (மூன்று கட்டுரைகள்), ஐக்கூ (கவிதை) எனப் பல்வேறு துறைகளில் அமைந்த, பல்வேறு கருத்தரங்களில் வாசிக்கப்பட்ட பன்னிரு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இலக்கியப் பணிகள், தொல்காப்பிய மொழிமரபு, கலித்தொகையின் கருத்தும் காட்சியும், வள்ளுவத்தில் காணப்படும் ‘உடைமை 39‘, பண்புகள், நான்மணிக்கடிகை கூறும் வாழ்வியல் உண்மைகள், ஏலாதி குறிப்பிடும் வாழ்வியல் மேன்மைகள் முதலியவை ஆராயப்பட்டுள்ளன.

அடுத்து, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படாத யாப்பருங்கலக்காரிகையில் உள்ள ஒழிபியல் மாணவர்களின் நலன் கருதி சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட "கல்லூரிப் பாடத்திட்டத்தில் காரிகையின் ‘ஒழிபியல் 39‘, திருக்குறளில் உள்ள இடைச்செருகல்கள், மூன்று முடிச்சுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

பல்துறை சார்ந்த அரிய நூல்கள் பலவற்றைப் பதிப்பித்த ச. மெய்யப்பனின் பதிப்புப் பணிகளையும், அவரது வாழ்க்கை வரலாற்றையும் (சுருக்கமாக) இறுதிக் கட்டுரை ஆராய்ந்துள்ளது. இதிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு துறையினருக்கும் பயன்தரும் வகையில் அமைந்துள்ளன.

நன்றி: தினமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *