உள்ளங்கையில் உலகம்

உள்ளங்கையில் உலகம், அ.ஸ்டீபன், வைகறை பதிப்பகம், பக். 64, விலை 40ரூ. உலகில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் – அது குடும்பம், உறவு, நட்பு, எதிர்ப்பு, நீதி, மனிதநேயம், நாடுகள் பற்றிய சர்ச்சை, தகவல் பரிமாற்றங்கள், அண்மையில் நிகழ்ந்த காவிரி பிரச்னை என்று அனைத்தையும் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும் வசதியை ஊடகங்கள் தந்துவிட்டன. ஆனால் அந்த ஊடகங்கள் குறித்த சரியான புரிந்துணர்வு இல்லை. அதை கற்பிக்கும் நூல் இது. நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை, அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், சென்னை, விலை 240ரூ. பாமரர்களையும் படிக்க வைத்த பத்திரிகை உலக முடிசூடா மன்னர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர். போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைவிலங்கு போடப்பட்ட ஒரே அரசியல் தலைவர். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை சந்தித்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சிமிக்க நடையில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி. ஆதித்னாருடன் […]

Read more