அவ்வையார் வரலாற்று நாடகக் காப்பியம்
அவ்வையார் வரலாற்று நாடகக் காப்பியம், கவிஞர் அவ்வை நிர்மலா, விழிச்சுடர்ப் பதிப்பகம், விலை 400ரூ.
சங்க காலத்தில் வாழ்ந்த அவ்வையாரைக் கதைக்களனாகக் கொண்டு, கவிஞர் அவ்வை நிர்மலா எழுதிய வரலாற்று நாடகக் காப்பியம். நாடகம் முழுவதும் மரபுக் கவிதைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து அங்கங்கள் ஒவ்வொன்றிலும் எட்டுக் காட்சிகள். 61 நாடகக் கதை மாந்தர்கள் என 12,345 அடிகளில் ஓர் அருமையான காப்பியத்தைப் படைத்துள்ளார். இது இருபதாம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் கவிதை நாடகம் என்றால் அது மிகையல்ல. “அரிய உழைப்பு, ஆழ்ந்த படிப்பு, ஆற்றல் மிக்க படைப்புத் திறன் – இவை இல்லாமல் இப்பெரிய பனுவலை இவர் இயற்றி இருக்க முடியாது.
மனோன்மணியம் சுந்தரனார், பரிதிமாற்கலைஞர் என்னும் விழுமிய வரி9சையில் அவ்வை நிர்மலா வைத்துக் கருதத் தக்கவர் என்பதை இந்த நூலைப் படித்த எவரும் ஒப்புவர்” என்று கவிஞர் ஈரோடு தமிழன்பன் அணிந்துரையில் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.
நன்றி: தினத்தந்தி, 15/11/2017