தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், டி.வி. ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தகநிலையம், விலை 100ரூ.
தமிழ் நாடக மேடை முதன் முதலில் தோன்றியதிலிருந்து இன்று வரை கண்டிருக்கும் மாற்றம், ஏற்றம் என்று அத்தனையையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
கடைச்சங்க காலம் முதலே நாடகக் கலை இருந்தது என்பது முதல், தமிழ் நாடகக் கலைக்கு வித்திட்ட சி.கன்னையா, சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்தம் முதலியார் என்று நாடகபிதாமகர்கள் பற்றிய தகவல்கள், அக்காலத்திய பிரபல நாடகங்கள், தற்காலத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நாடகக்குழுக்கள், அவர்களின் சிறந்த நாடகங்கள் என்று தேடித்தேடி ஒன்றுவிடாமல் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.
நன்றி: குமுதம், 26/7/2017.