சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள்
சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள், தி. கல்பனாதேவி, இராசகுணா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ.
சித்தர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் எழுதிய நூல்கள், மருத்துவ விளக்கங்கள், சமயம், உயிர்களின் பிறப்பு போன்ற பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சாதக அலங்காரத்தை முதன்மையாக எடுத்துக்கொண்டு அதில் மருத்துவம், மந்திரம், ஜோதிடம் என்ற பிரித்து ஆராயப்பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு, சித்தர்கள் செய்த அஷ்டகர்மம் என்ற எட்டுவகைச் செயல்களும் விளக்கப்பட்டுள்ளன. சமய வழிபாட்டு முறைகள், புத்திரப்பேறு மற்றும் திருமணத் தடைகளுக்கு அரசமர வழிபாடு, நாகப் பிரதிஷ்டை ஆகியவையும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தேவ மருத்துவம், மனித மருத்துவம், இரச மருத்துவம் போன்றவை குறித்தும் சித்த மருத்துவ முறைகளான, அக மருத்துவம், புற மருத்துவம், குறித்த மருத்துவத் தகவல்களும் ஆய்ந்தறிப்பட்டுள்ளன. சித்தர்கள் ஜோதிட கருததுக்களில் கர்ப்ப உற்பத்தி முதல் குழந்தைப் பேறு வகையிலான பிண்டத்தின் வளர்ச்சி நிலைகளை அறிய முடிகிறது. நவக்கிரகங்கள், சர்ப்ப தோஷம், பரிகார பூஜைகள், கொடி சுற்றல், மாலை சுற்றி பிறக்கும் குழந்தைகளுக்கு பரிகார முறைகள், குருசந்திர யோக விளக்கம், சாமுத்திரிகா லட்சணம், வாகன பலன், இருதார அமைப்பு போன்ற ஜோதிட விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. அனைவரும் படித்து பயன்பெறக் கூடிய சிறந்த புத்தகம். நன்றி: தினமணி, 9/3/2015.