அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும்
அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம், பக்.374, விலை ரூ.300. அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன. ‘கம்பர் விலாசம் 39’ ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார். இவர், […]
Read more