பிணா

பிணா, பத்மஜா நாராயணன், விருட்சம், பக். 71 விலை 50ரூ. ஆசிரியரின் கவிதைகளில் கடல், அலை, நதி, காற்று, நரம்புகள் ஊடாக பறக்கும் பறவை, பச்சை கிளிகள் என, புற உலகம் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒரு பெண் தனிமையில் வாடுகிறாள், தன்னை நெருங்கியவரின் பிரிவால் தடுமாறுகிறார் என்பதை கவிதையில் கொண்டு வந்துள்ளார். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

நவீன யுகம்

நவீன யுகம், அஜயன் பாலா, நாதன் பதிப்பகம், பக். 328, விலை 300ரூ. சினிமாவின் நவீன யுகமாக கலை சினிமாவுக்கும், வணிக சினிமாவுக்கும் இடைப்பட்ட கோடு அழியத் துவங்கிய காலம் துவங்கியது. உலக சினிமா வரலாற்றின் முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இந்தப்புத்தகம் தொழில்நுட்ப வளர்ச்சி, காட்சிப்படுத்தல் உத்திகள் என, நவீன யுக உலக சினிமாக்களை ரசனையோடு விவரிக்கிறது. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

மகளதிகாரம்

மகளதிகாரம், ஆண்டன்பெனி, தமிழ் அலை பதிப்பகம், பக். 104, விலை 90ரூ. ஒரு மகளின் ஆளுமையிலும், அதிகாரத்திலும் உணர்ந்ததை, கவிதையாக மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். மகன், ஒரு தகப்பனின் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறான் என்றால், மகளோ, ஒரு தகப்பனின் வாழ்வையே முழுமையாக்குகிறாள் என்பதாக, இந்நூல் அமைந்து உள்ளது. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை, முகில், விகடன் பிரசுரம், பக். 264, விலை 190ரூ. மண்ணில், ஆட்சி செய்த, ஆட்சிக்காக அட்டூழியம் செய்த கொடூரர்களின் வரலாறு. வார இதழில் தொடராக வந்த கட்டுரைகள், இப்போது நூல் வடிவமெடுத்திருக்கின்றன. சிலரின் வரலாற்றை அறியும்போது, வாசகர்கள் அதிர்ச்சி அடைவர் என்பது உறுதி. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

அகநாழிகை

அகநாழிகை,(கலை இலக்கிய இதழ்), பொன்.வாசுதேவன், அகநாழிகை, பக். 128, விலை 120ரூ. கலை இலக்கிய இதழ், பிரபல எழுத்தாளர்களின் நேர்காணல், கட்டுரை, சிறுகதைகள், நூல் அறிமுகம், கவிதைகள் என, முழுமையான இலக்கிய இதழாக வெளிவந்திருக்கிறது அகநாழிகை. இலக்கிய வட்டாரத்தில் இந்நூல் தடம் பதிக்கும். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

பீஷ்மரின் தேசம்

பீஷ்மரின் தேசம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 272, விலை 225ரூ. கங்கையின் மைந்தராக பிறந்து, பிரம்மச்சாரியாக வளர்ந்து, தன் சகோதரர்களுக்கும், தந்தைக்கும் உறுதுணையாக இருந்தவர் பீஷ்மர். அஸ்தினாபுர சாம்ராஜ்யத்தை, அரணாக இருந்து, நான்கு தலைமுறையை வழிநடத்திய பீஷ்மரின் வரலாற்றை, இந்நூல் விரிவாக விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

முருகன் அருள் செல்வம்

முருகன் அருள் செல்வம், பி.எல்.முத்துக்குமாரன், விலை 300ரூ. முருகப் பெருமானைப் பற்றிய அனைத்து விவரங்களும் கொண்ட நூல். மேலும் இதில் முருகன் பாடல்கள் மூலமும், உரையோடு இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/2/2018.  

Read more

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம், சபீதா ஜோசப், நக்கீரன் வெளியீடு, விலை 80ரூ. 136 திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். பிறகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக தொடர்ந்து 11 ஆண்டுகள் பதவி வகித்து சாதனை படைத்தார். திரைப்படத்துறையில், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகள் பற்றிய சுவைபட எழுதியுள்ளார் சபீதா ஜோசப். எம்.ஜி.ஆர். பற்றிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.

Read more

சிங்காரவேலர்

சிங்காரவேலர், பா.வீரமணி, சாகித்திய அகாதெமி, விலை 50ரூ. விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைச் சிந்தனையின் முன்னோடியுமான சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.

Read more

மதிகெட்டான் சோலை

மதிகெட்டான் சோலை, சரவணன் சந்திரன், கிழக்கு பதிப்பகம், பக். 200, விலை 190ரூ. மதிகெட்டான் சோலை, சமகால அரசியல், வணிகம், சமூகம் உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்களை முன் முடிவுகளற்று அருகில் சென்று, ஆழம் பார்த்து எழுத்தாக வடிக்கப்பட்டுள்ளது. அனுபவத் திரட்சியாக உள்ளதால், ரத்தமும் சதையுமான மனிதர்களின் துறைகள் குறித்த வெளிப்படையான கட்டுரைகளாக விரிந்துள்ளன. இதில், 27 கட்டுரைகள், வெவ்வேறு துறை சார்ந்து விரிந்துள்ளன. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more
1 2 3 4 5 10