மதிகெட்டான் சோலை
மதிகெட்டான் சோலை, சரவணன் சந்திரன், கிழக்கு பதிப்பகம், பக். 200, விலை 190ரூ.
மதிகெட்டான் சோலை, சமகால அரசியல், வணிகம், சமூகம் உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்களை முன் முடிவுகளற்று அருகில் சென்று, ஆழம் பார்த்து எழுத்தாக வடிக்கப்பட்டுள்ளது. அனுபவத் திரட்சியாக உள்ளதால், ரத்தமும் சதையுமான மனிதர்களின் துறைகள் குறித்த வெளிப்படையான கட்டுரைகளாக விரிந்துள்ளன. இதில், 27 கட்டுரைகள், வெவ்வேறு துறை சார்ந்து விரிந்துள்ளன.
நன்றி: தினமலர், 17/1/2018.