பேலியோபுரம்

பேலியோபுரம், நியாண்டர் செல்வன், ஆரோக்கியம் நல்வாழ்வு, பக். 224, விலை 220 ரூ. உடலின் எடையை குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும், பலரும், டயட் மேற்கொள்கின்றனர். நேரத்திற்கு தகுந்தாற்போல் உணவையும், முறையான பயிற்சியையும், எடுத்தால், உடம்பிற்கு கொழுப்பு நல்லதுதான். நாம் சாப்பிடும் உணவு, இயற்கையிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்பதை, இந்த நூல் வாசகர்களுக்கு உணர்த்தும். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

பரிபூரண அருளாளன்

பரிபூரண அருளாளன், ஆர்.வெங்கடேஷ், தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், பக். 104, விலை 100ரூ. திருவண்ணாமலை, பல யோகிகளையும், ஞானிகளையும் வழங்கிய அக்னி மலை. அங்கேதான் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் உள்ளிட்டோர் வாழ்ந்தனர். உ.பி.யில் இருந்து, 1950களில், திருவண்ணாமலை வந்து, 40ஆண்டுகள், பக்தர்களுக்கு அருளியவர், யோகி ராம் சுரத்குமார். சாமி, பகவான், யோகி, விசிறி சாமியார் என்றெல்லாம் உணர்ச்சி பெருக்குடன் பக்தர்கள் வழிபட்டனர். அவரின் அருள் பெற்றோரின் அனுபவத் தொகுப்பே இந்நூல். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

மணிமகுடம்

மணிமகுடம், ஜெய் சீதாராமன், விருட்சம், பக். 130, விலை 120ரூ. குவிகம் மின்னிதழில் தொடராக வெளிவந்து, பலராலும், கவனிக்கப்பட்ட இந்த சரித்திர குறுநாவல், தற்போது அச்சாகி உள்ளது. பாண்டியர்களின் வம்சாவளி பொக்கிஷங்களான, விலை மதிக்க முடியாதமணிமகுடத்தில் இருந்தும், ரத்தின மாலையில் இருந்தும், இந்த கதை எழுகிறது. இலங்கை மன்னன் மகிந்தன், ஈழத்தில் மறைத்த மதுரை பாண்டியர்களின் பொக்கிஷங்களைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள்

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள், கல்கி, நிலா காமிக்ஸ், பக். 42, விலை 145ரூ. கல்கியின், பொன்னியின் செல்வன், ஐந்து தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகமான, வரலாற்று நாவல்களின் சிகரம். அதை, இளைஞர்களும் முதியோரும் படித்திருப்பர். அதில் 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட, மன்னர்களின் வீரம், தீரம், பக்தியை கண் முன் கொண்டு வந்திருப்பார் கல்கி. அதை சிறுவர்களுக்கான படக்கதையாக மாற்றி அருமையான படைப்பாக வெளியிட்டிருக்கிறது நிலா காமிக்ஸ். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

எல்லா உணவும் உணவல்ல

எல்லா உணவும் உணவல்ல, பாலு சத்யா, விகடன் பிரசுரம், விலை 125ரூ. உணவு வகைகளில் அச்சமின்றி உண்ணும் உணவு எது? அளவோடு உண்ணும் உணவு எது? தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை? நோயுற்றவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு எது? இப்படி உணவுகள் பற்றி பயனுள்ள தகவல்கள் கூறுகிறார் பாலு சத்யா. அத்துடன் பிரியாணி முதல் கேக் வரை பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

அண்ணன்மார் சுவாமிகள்

அண்ணன்மார் சுவாமிகள், பொன்னன் சங்கர் வீர வரலாறு, பாஸ்கரதாசன், கொங்குநூல் பதிப்பகம், விலை 240ரூ. கொங்கு நாட்டின் வீரகாவியம், அண்ணன்மார் சுவாமிகள் என்று போற்றப்படும் பொன்னர் சங்கரின் வீரமும் புனிதமும் நிறைந்த வரலாறு. எழுத்து நயமும் விறுவிறுப்பும் கொஞ்சமும் குறையாத புதினமாகப் புனையப்பட்டிருக்கும் விதம் அருமை. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

ஒரு துளியின் துளித்துளி

ஒரு துளியின் துளித்துளி, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், விலை 70ரூ. கழிந்து செல்லும் கணங்களில் நடந்தவற்றைக் கூர்ந்து நோக்கியதால் செதுக்கப்பட்டிருக்கும் கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் விதவிதமான கோணத்தில் எழுதப்பட்டிருப்பது சோர்வில்லா வாசிப்புக்குத் துணை நிற்கிறது. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

வட இந்திய வரலாறு

வட இந்திய வரலாறு, இர.ஆலால சுந்தரம், சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 400ரூ. இந்தியாவின் வடக்கே, ஹர்ஷரின் ஆட்சிக்காலத்துக்குப் பின் நடந்த இந்து மன்னர்களின் ஆட்சிக் கால வரலாறும், கஜினி முகமது தொடங்கி குத்புதீன் ஐபக் வரையிலான முஸ்லிம் அரசர்களின் வரலாறும் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கும் நூல். மத்திய மாநில போட்டித் தேர்வுகளுக்கான பாடநூல் என்று குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருந்தும். நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

உயிர்மெய்

உயிர்மெய்,  கு.சிவராமன், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.185. பருவ வயது தொடங்கும் ஆண், பெண் உடல்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது தொடங்கி, திருமணமாகி அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது வரை ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக விளக்கும் நூல். தைராய்டு பிரச்னை, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் கருத்தரிப்பதில் பல தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்தத் தடைகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ஆண்-பெண் உறவு தொடர்பான அனைத்து கற்பிதங்கள், நம்பிக்கைகளின் உண்மைத்தன்மைகளை இந்நூல் எடுத்துக்காட்டி, அது […]

Read more

மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும்

மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும் – முதல் ஒப்புமை நூல் – வி.ச.வாசுதேவன், அமிர்தவல்லி பிரசுரம், பக்.144, விலை ரூ.100. மகாகவி பாரதியாரையும், கணிதமேதை இராமானுஜத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நூல். 1882 இல் பாரதியார் பிறந்தார். 1887 இல் இராமானுஜன் பிறந்தார். சமகாலத்தவர்களான அவர்களின் இளமைக் காலம் தொடங்கி இறுதி வரை நிகழ்ந்த நிகழ்வுகளை கால வரிசைப் படி இந்நூல் தொகுத்து வழங்குகிறது. சிறுவயதில் பாரதியார் தேய மீதெவரோ சொலும் சொல்லினைச் செம்மை என்று மனத்திடைக் கொள்ளும் தீய பக்தியியற்கை இல்லாதவராக (பிறர் சொல்வதை அப்படியே […]

Read more
1 2 3 4 5 6 10