உயிர்மெய்

உயிர்மெய்,  கு.சிவராமன், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.185.

பருவ வயது தொடங்கும் ஆண், பெண் உடல்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது தொடங்கி, திருமணமாகி அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது வரை ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக விளக்கும் நூல்.

தைராய்டு பிரச்னை, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் கருத்தரிப்பதில் பல தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்தத் தடைகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

ஆண்-பெண் உறவு தொடர்பான அனைத்து கற்பிதங்கள், நம்பிக்கைகளின் உண்மைத்தன்மைகளை இந்நூல் எடுத்துக்காட்டி, அது தொடர்பான மன உளைச்சலில் சிக்கி வருந்திக் கொண்டிருப்பவர் களுக்கு வழிகாட்டுகிறது.

சிறப்பான மணவாழ்க்கை, உரிய காலத்தில் குழந்தைப் பேறடைதல் ஆகியவற்றுக்கு எவ்வாறெல்லாம் உடலையும் மனதையும் ஒழுங்கு செய்து கொள்ளவேண்டும் என்று விளக்கும் இந்நூல், கொள்ள வேண்டிய உணவு வகைகள், செய்ய வேண்டிய உடல், மனப் பயிற்சிகளையும் எடுத்துச் சொல்கிறது. நவீன, செயற்கையான, இயந்திரமயமான வாழ்க்கையில் இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுத் தரும் சிறந்த நூல்.

நன்றி: தினமணி, 19/3/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *