திறந்த புத்தகம்
திறந்த புத்தகம், அழகியசிங்கர், விருட்சம், பக்.211, விலை ரூ.170. அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம். கவிஞர், கதாசிரியர், பல்லாண்டுகள் ஒரு சிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகிறார். மொத்தம் ஐம்பது பதிவுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இத்தொகுப்பில். அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் […]
Read more