திறந்த புத்தகம்

திறந்த புத்தகம், அழகியசிங்கர், விருட்சம், பக்.211,  விலை ரூ.170. அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம். கவிஞர், கதாசிரியர், பல்லாண்டுகள் ஒரு சிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகிறார். மொத்தம் ஐம்பது பதிவுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இத்தொகுப்பில். அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் […]

Read more

திறந்த புத்தகம்

  திறந்த புத்தகம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 211, விலை 170ரூ. திறந்த புத்தகம் என்னும் இந்நுால், முகநுாலில் எழுதிய, 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. ‘அப்பாவும் நானும்’ எனும் கட்டுரையில், அப்பா இருக்கும் அறையில் தான், நான் புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டிருப்பேன். ‘என் அறை என்று தான் பேர்; ஆனா, உன் புத்தகங்கள் தான் இருக்கு’ என்று கோபமாக முணுமுணுப்பார் என்று குறிப்பிட்டிருப்பது, இந்நுாலின் ஆசிரியர் பல நுால்களை படிக்கும் வழக்கத்தை கொண்டவர் என்பது தெரிகிறது. நன்றி:தினமலர், 25/3/2018

Read more