அஞ்சலட்டை கதைகள்

அஞ்சலட்டை கதைகள், அழகியசிங்கர், விருட்சம் வெளியீடு, விலைரூ.90. ஒற்றை அஞ்சலட்டை ஆயிரம் கதைகளைச் சொல்லும். அவை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவை. ரகசியமற்று வெளிப்படையாக இருப்பது எவ்வளவு உற்சாகம் தரவல்லது என்பதை உணர்த்தும் அற்புத அடையாளம். அதில் எழுதிய அனுபவம் பற்றிய நுால்.அஞ்சலகத்தில், ஒவ்வொரு முறையும் நுாறு அஞ்சலட்டைகளை வாங்குகிறார் ஆசிரியர். எதுவும் எழுதப்படாத அதன் மவுனத்தை, மணிக்கணக்கில் பார்த்துச் சிலாகிக்கிறார். பின்னொரு நாளில், அதில் கடிதம் எழுதுகிறார். பதில் இல்லை. ஆயிரம் கதை சொல்லும் அஞ்சலட்டையில், ஒரு குறுங்கதை எழுதினால் என்ன எனத் […]

Read more

பிரமிளும் விசிறி சாமியாரும்

பிரமிளும் விசிறி சாமியாரும், அழகியசிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 90ரூ. ‘பிரமிளும் விசிறிச் சாமியாரும்’ என்ற பெயரைப் பெரிய திட்டத்துடன் அழகியசிங்கர் வைத்திருக்க முடியாது. பிரமிள், தமிழில் சில ஆயிரம் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமானவர். விசிறிச் சாமியாரோ மிகவும் பிரபலம். தனக்கு ஆதர்ச குருவான விசிறி சாமியாரைப் பார்ப்பதற்காக அழகியசிங்கரையும் பிரமிள் கூட்டிச்சென்றது பற்றி இப்புத்தகத்தில் ஒரு கட்டுரை உள்ளது. மற்றவை எல்லாம் பிரமிள் என்ற தமிழின் பெரும் ஆளுமையான கவிஞனின் தினசரித் தன்மைகளை, கோபதாபங்களை, அல்லல்களை, கொண்டிருந்த நம்பிக்கைகளை விவரிப்பதாக உள்ளது. ஒரு […]

Read more

திறந்த புத்தகம்

திறந்த புத்தகம், அழகியசிங்கர், விருட்சம், பக்.211,  விலை ரூ.170. அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம். கவிஞர், கதாசிரியர், பல்லாண்டுகள் ஒரு சிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகிறார். மொத்தம் ஐம்பது பதிவுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இத்தொகுப்பில். அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. இந்நூலாசிரியர் அண்மையில் தான் படித்த எட்டு நாவல்கள், ஐந்து கவிதைத் தொகுதிகள், ஐந்து கட்டுரைத் தொகுதிகள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள் என மொத்தம் இருபது நூல்களைப் பற்றி இந்நூலில் சுருக்கமாக அறிமுகம் செய்திருக்கிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற முதல் வரிசை எழுத்தாளர்களிலிருந்து தனது முதல் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் ராமலக்ஷ்மி வரை பலருடைய நூல்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஜாதிப் பிரச்னைகளின் பல்வேறு முகங்களைக் காட்டும் “சஞ்சாரம்’‘ […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. சென்ற ஆண்டு தான் படித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களிலிருந்து 20 புத்தகங்களை மட்டும் எடுத்து விமர்சனமாக எழுதி அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார் அழகியசிங்கர். மருத்துவம், கவிதை, கதை என எல்லாமும் இதில் உள்ளன. சாருவின் நூல் பற்றிப் பேசுவதையில் அவர் எழுத்துத் திறனை சிலாகித்தும் அவரின் சில கருத்துகளை நிராகரித்தும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம். எழுத்தாளர்களை கௌரவிக்கும் செயல் இந்நூல் எனலாம். நன்றி: கல்கி, 21/8/2016.

Read more