தடைகள் தாண்டிப் பாயும் நதி

தடைகள் தாண்டிப் பாயும் நதி, பிருந்தா சீனிவாசன், தி இந்து, விலை 120ரூ. இந்தச் சமூகம் பெண்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தகர்த்து வெளியேறும் பெண்கள் குறித்தும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

சங்கப் பெண் கவிதைகள்

சங்கப் பெண் கவிதைகள், சக்தி ஜோதி, சந்தியா பதிப்பகம், விலை 400ரூ. சங்கப் பெண் புலவர்கள் 45 பேர் எழுதிய கவிதைகளை வரலாற்றுப் பின்புலத்தோடும் இன்றைய நோக்கிலிருந்தும் ஆராய்ந்து பார்க்க உதவுகிறது இந்நூல். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

சகோதரி நிவேதிதை விரிவான வாழ்க்கை வரலாறு

சகோதரி நிவேதிதை விரிவான வாழ்க்கை வரலாறு, சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், பக். 625, விலை 275ரூ. அன்பினுக்கு ஓர் கோவிலாய், எமதுயிர் நாடாம் பயிருக்கு மழையாய் வாழ்ந்த அன்னை’ என்று, பாரதியார் புகழ்ந்த சகோதரி நிவேதிதையின் 151ம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் வெளியாகி உள்ள சிறந்த நுால். குருநாதர் விவேகானந்தர் காட்டிய ஆன்மிப் பாதையில் வாழ்ந்த இவரை ஐரோப்பியப் பெண் என்பது மடமை. தியாகமும், தொண்டும் லட்சியமாகக் கொண்டவர். அதன் அடையாளமாக நிவேதிதை அன்னையின் பெருமை, புனிதம், ஆற்றல் ஆகிய […]

Read more

வேளாண்மையில் மேலாண்மை

வேளாண்மையில் மேலாண்மை, நா. ரங்கராமானுஜம், தமிழ்நாடு மத்த வேளாண் வல்லுனர் பேரவை, பக். 448, விலை 350ரூ. வேளாண்மையில் முதல் பணியான, நில சீர்திருத்தம் முதல், விதை நுட்பம், அறுவடைக்கு பிந்தைய நுட்பம் வரை, அனைத்து தொழில் நுட்பங்களும், இந்நுாலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தானிய பயிர்கள், நறுமணப்பயிர்கள், தீவனப்பயிர்கள் என, 78 பயிர்களின் சாகுபடி முறைகள், இந்நுாலில் விளக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மை மற்றும் மூலிகை வேளாண்மை குறித்தும், பல்வேறு செய்திகள் உள்ளன. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

அந்த ஏழு நாட்கள்

அந்த ஏழு நாட்கள், எஸ். ரங்கராஜன், அகநாழிகை பதிப்பகம், பக். 100, விலை 100ரூ. மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். கணக்குத் தணிக்கையோடு இணைத்து, மனிதாபிமானத்துடன், ஒரு விஷயத்தை எப்படி அணுக முடியும் என்பதை, இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார். ஒவ்வொரு பாத்திரமும், நல்ல குணங்களின் அற்புத வார்ப்புகள். இலக்கியம், இத்தகைய அற்புத குணநலர்களை முன்னிலைப்படுத்தும்போது, மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படுகிறது. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

மச்ச புராணம்

மச்ச புராணம், வேணு சீனிவாசன், கிழக்கு பதிப்பகம், பக்.312, விலை 290ரூ. திருமாலின், 10 அவதாரங்களில், முதன்மையானது மச்ச அவதாரம். வியாச முனிவரால் எழுதப்பட்ட, 18 புராணங்களுள், மச்ச புராணத்திற்கு, தனி சிறப்பு உண்டு. மீன் வடிவெடுத்து, நீர்ப்பிரளயத்தில் இருந்து, இவ்வுலகை காத்தார் என்ற புராணத்தை, எளிய நடையில் ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆன்மிகம் நாட்டம் கொண்டோர், இந்நுால் வாசித்தால், மகிழ்ச்சி அடைவர். நன்றி: தினமலர், 10/1/2018

Read more

புலி – ஆடு, புல்லுக்கட்டு

புலி – ஆடு, புல்லுக்கட்டு, டாக்டர் ஆர். கார்த்திகேயன், தாமரை பிரதர்ஸ் மீடியா, பக். 80, விலை 60ரூ. இந்த புத்தகத்தைப் பார்த்ததும், ‘இதெல்லாம் ஒரு புத்தகமா?’ என்று நினைக்க தோன்றுகிறதா? ‘ஆம்’ என்பது உங்கள் பதில் எனில், அதை வாங்க வேண்டிய இரண்டாம் நபர் நீங்கள். ‘இல்லை’ என்பது உங்கள் பதில் என்றால், முதல் நபர் நீங்கள் தான். ஏன் என்றால்… இதில் நீங்கள் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஆயிரம், ‘ஏன்’களுக்கு இதில் விடை இருக்கிறது. ‘அதிகம் செல்பி எடுப்பவர்கள் ஆண்களா, […]

Read more

அந்தர மனிதர்கள்

அந்தர மனிதர்கள், வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம், பக்.112, விலை 105ரூ. பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாக கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது. முகம் தெரியாத யாரோ ஒருவரின் விந்தணுவை சுமக்கும் பெண் முதல், ஆழ்கடலுக்குள் சென்று பாசி பறிக்கும் நபர் வரை, அனைவரையும், பசி துரத்துகிறது. அதைதான், இந்நுால் பதிவு செய்திருக்கிறது. நன்றி: தினமலர், 12/1/2018

Read more
1 8 9 10